அமெரிக்க அதிபர் தேர்தல்.. கலிபோர்னியாவில் தமிழில் வாக்குச்சீட்டு.. ஏன் தெரியுமா.. சுவாரசிய காரணம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சீட்டு இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: வரும் நவ. 5ம் தேதி நடைபெறும் இந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதேபோல குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது. இது தவிர க்ரீன் பார்டி, லிபரல் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.
அங்குத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
முன்கூட்டியே வாக்களிக்கலாம்: அங்கு என்ன தான் வாக்குப்பதிவு நவ. 5ம் தேதி தான் என்றாலும் அங்கு பெரும்பாலான மாகாணங்களில் வாக்காளர்களால் முன்கூட்டியே வாக்களிக்க முடியும். இதை அங்கு early voting என்பார்கள். அதாவது, வாக்குப்பதிவு நவ. 5ம் தேதி தான் என்றாலும் அதற்கு முன்பே மக்கள் வாக்களிக்கலாம். அங்குள்ள 50 மாகாணங்களில் அலபாமா, மிசிசிப்பி மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணங்களைத் தவிர மற்ற மாகாணங்கள் அனைத்திலும் இப்படி முன்கூட்டியே வாக்களிக்க முடியும். ஏற்கனவே சில மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் வாக்குப்பதிவும் தொடங்கிவிட்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலாக இருந்தாலும் தேர்தலை நடத்தும் பொறுப்பு அந்தந்த மாகாணங்களுக்கே இருக்கிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது நாட்டில் லோக்சபா தேர்தலை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையமே நடத்தும். ஆனால், அமெரிக்காவில் அதிபர் தேர்தலாக இருந்தாலும் அது மாகாண தேர்தல் ஆணையங்களே நடத்தும். அந்தந்த மாகாணத்திற்கு என்ன தேவையோ அதைப் பொறுத்தே விதிமுறை வகுக்கப்பட்டுத் தேர்தல் நடக்கும். இதுவே அங்கு விதிமுறை.
தமிழில் வாக்குச்சீட்டு: அமெரிக்காவைப் பொறுத்தவரை கலிபோர்னியா மாகாணம் இந்தியர்கள் அதிகம் இருக்கும் மாகாணம். அங்குத் தமிழர்கள், தெலுங்கு மக்கள் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் பணிபுரிவோர் அதிகம் வசிக்கிறார்கள். இதற்கிடையே அங்குள்ள கான்ட்ரா கோஸ்டா கவுன்டியில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழியினர் அதிகம் வசிப்பதால் அவர்களின் தாய்மொழியிலும் வாக்குச்சீட்டு வழங்கப்படுகிறது. அப்படி தான் தமிழில் வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கு தலா ஆறு பேர் களத்தில் உள்ளனர். யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ.. அந்த வேட்பாளர் பெயருக்கு அருகே உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தமிழில் விளக்கியுள்ளனர். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications