கொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன்
கமலா ஹாரிஸ் டீமில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்
வாஷிங்டன்: அமெரிக்காவை விட்டு இன்னும் கொரோனா போன பாடில்லை. இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கொரோனா ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கமலா ஹாரிஸ் டீமில் ஒருவருக்கு கொரோனா வந்து விட்டதாம். இதற்கிடையே டிரம்ப்பை தனது பிரச்சாரத்தில் கொரோனாவைப் பத்திப் பேசினாலே பீதியாகி விடுகிறார் என ஜோ பிடன் கூறியுள்ளார்.
ஏற்கனவே இப்படித்தான் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா வந்தது. அதேபோல துணை அதிபர் பென்ஸ் கண்கள் சிவந்திருந்தது தொடர்பாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது கமலா ஹாரிஸ் டீம் வரைக்கும் கொரோனா வந்து விட்டது.

இதன் காரணமாக தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் கமலா ஹாரிஸ். நேரில் சென்று வாக்கு சேகரிப்பதற்குப் பதில் ஆன்லைன் மூலமாக அவர் வாக்கு சேகரிக்க போகிறாராம்.
சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனாவைரஸ் தொடர்ந்து உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது. குறைவது போலத் தோன்றினாலும் கூட 2வது அலை என்று இப்போது பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ்... இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரனாாவும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அதிபர் டிரம்ப் கொரோனா ஒழிப்பில்தோல்வி அடைந்து விட்டதாக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக சாடி வருகிறார்.. தொடர்ந்து அதையே குறி வைத்தும் பேசி கொண்டிருக்கிறார்... அமெரிக்க பொருளாதாரத்தை கொரோனாவைரஸ் காலிசெய்து விட்டதாக கூறியுள்ள அவர் கொரோனாவை ஒழித்தால்தான் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே டிரம்ப் - பிடன் இடையிலான 2வது விவாதம் ரத்தாகி விட்ட நிலையில் வியாழக்கிழமையன்று ஆளுக்கொரு டிவியில் தோன்றி பேசினர்.. 2வது விவாதத்திற்கு வர டிரம்ப் மறுத்து விட்டதால் அது ரத்தானது என்பது நினைவிருக்கலாம்.. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இருவரும் 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். டிரம்ப் என்பிசி டிவிக்காகவும், பிடன் ஏபிசி டிவிக்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.. அப்போது பிடன் பேசுகையில், டொனால்ட் டிரம்ப், கொரோனா குறித்துப் பேசினாலே பீதியாகி விடுகிறார் என்று நக்கலடித்தார்.. பதிலுக்கு டிரம்ப், நாங்கள் மிகவும் திறமையாக இந்த பிரச்சினையை கையாண்டுள்ளோம் என்று பதிலடி கொடுத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications