Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொருளாதார மந்த நிலை நோக்கி அமெரிக்கா? ஐடி உட்பட இந்தியாவில் எந்த துறைகளுக்கு பாதிப்பு? எவ்வளவு காலம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அட்லாண்டா ஃபெட் வங்கியின் சமீபத்திய ஜிடிபி கணிப்பு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் -2.8% வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தது இந்த அச்சத்திற்கு முக்கிய காரணம். பண வாட்டம் என்ற பெயரிலும், பொருளாதார மந்த நிலை அழைக்கப்படும். அதாவது மக்கள் கையில் பணப் புழக்கம் இருக்காது என்பது இதற்கான சிம்பிள் விளக்கம்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் மற்றும் அவற்றை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்க திட்டமிட்டிருப்பது ஆகியவை பொருளாதார மந்தநிலைக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்படவுள்ள இந்த வரிகள் காரணமாக, அமெரிக்காவுடன் வணிகம் செய்யும் நாடுகள் பதிலுக்கு வரிகளை விதிக்க வாய்ப்புள்ளது.

Recession US Information technology IT employee

இதன் விளைவாக, அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இது பொருளாதார மந்தநிலைக்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும், 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு ஜிடிபி வளர்ச்சி முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், வீட்டுவசதி மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளுக்கான செலவினங்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் அதிகரித்துவரும் தேசிய கடனும், அதற்கான வட்டி செலுத்துதலும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மந்தநிலைக்கான அறிகுறிகள்

பிஎம்ஐ (உற்பத்தி மேலாளர் குறியீடு) போன்ற பொருளாதார குறிகாட்டிகள் சரிவைக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் வணிக நம்பிக்கை குறைந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி குறைந்து வருகிறது.
அமெரிக்காவின் ஏற்றுமதி அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தனிநபர் நுகர்வு குறைந்து வருவது பொருளாதாரத்திற்கு கவலையளிக்கிறது.

இந்தியாவிற்கான பாதிப்புகள்

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படலாம். நுகர்வு குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவிற்கான உலோக ஏற்றுமதி அதிகரிக்கலாம். அதே நேரத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் பெறும் ஆர்டர்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், இந்தியா அதன் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்க பொருளாதார மந்தம் வரலாறு

14 அதிகாரப்பூர்வ மந்தநிலைகளை இதுவரை அமெரிக்கா சந்தித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மந்தநிலைகள் குறைந்துள்ளன. கொள்கை வகுப்பாளர்கள் அவற்றின் காரணங்களை நன்கு புரிந்து கொண்டதே இதற்கு காரணமாக இருக்கலாம். பொருளாதார மந்தநிலை சில நேரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளில் ஏற்படும் வீழ்ச்சியாக வரையறுக்கப்படுகிறது.

மே 1937 - ஜூன் 1938 வரையில் அமெரிக்காவில் மந்த நிலை இருந்தது. 1937 இல் சமூக பாதுகாப்பு ஊதிய பிடித்தம் தொடங்கியதை அடுத்து, 1936 இல் ஜிடிபியில் 5.4% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 1938 இல் ஜிடிபியில் 0.1% ஆக குறைந்தது. இதற்கிடையில், 1936 இல் பெடரல் ரிசர்வ் வங்கிகளுக்கான இருப்புத் தேவை விகிதங்களை இரட்டிப்பாக்கியது. இதனால் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க கருவூலம் அதே ஆண்டில் தங்க வரவுகளை சுறுக்கியது. செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி குறையத் தொடங்கியது. நிதி சிக்கன நடவடிக்கைகளை கொள்கை வகுப்பாளர்கள் திரும்பப் பெற்ற பிறகு மந்தநிலை முடிவுக்கு வந்தது.

உலக போர் காரணமாக மந்த நிலை

பிப்ரவரி 1945 - அக்டோபர் 1945 வரை, அமெரிக்காவில் மற்றொரு மந்த நிலை இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்க அரசாங்கம் செலவினங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை குறைத்ததால் அந்த மந்த நிலை ஏற்பட்டது. நவம்பர் 1948 - அக்டோபர் 1949, ஜூலை 1953 - மே 1954, ஆகஸ்ட் 1957 - ஏப்ரல் 1958, ஏப்ரல் 1960 - பிப்ரவரி 1961, டிசம்பர் 1969 - நவம்பர் 1970, நவம்பர் 1973 - மார்ச் 1975, ஜனவரி 1980 - ஜூலை 1980, ஜூலை 1981 - நவம்பர் 1982, ஜூலை 1990 - மார்ச் 1991 (வளைகுடா போர் காரணமாக), மார்ச் 2001 - நவம்பர் 2001, டிசம்பர் 2007 - ஜூன் 2009, கொரோனா காலத்தில், பிப்ரவரி 2020 - ஏப்ரல் 2020 வரையிலான மந்த நிலை என அமெரிக்கா கண்ட முக்கியமான மந்த நிலைகளை இவைதான்.

பொருளாதார மந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்?

அமெரிக்கா 1857 முதல் 34 மந்தநிலைகளை அனுபவித்துள்ளது. கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் 2 மாதங்கள் மட்டுமே மந்த நிலை பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 வரை இருந்தன. ஆனால் ஒருமுறை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கூட மந்த நிலை இருந்துள்ளது. 1873ம் ஆண்டு அக்டோபர் முதல் 1879ம் ஆண்டு மார்ச் வரை இப்படி ஒரு மந்த நிலையை அமெரிக்கா பார்த்தது. ஆக மொத்தம் அமெரிக்காவின், சராசரி மந்தநிலை 17 மாதங்கள் ஆகும். அதே நேரத்தில் 1980க்கு பிறகு மந்த நிலை காலகட்டம் குறைக்கப்பட்டுவிட்டது. இதன்பிறகு ஏற்பட்ட ஆறு மந்தநிலைகள் சராசரியாக 10 மாதங்களுக்கும் குறைவாகவே நீடித்தன. எனவே இம்முறை மந்த நிலை வந்தாலும் கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டால் கடந்துவிடலாம் என்றே தெரிகிறது.

எந்த பங்குகள் மந்தநிலையின் போது சிறப்பாக செயல்படுகின்றன?

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் எப்போதுமே டிமாண்ட் உள்ளவைதான். அதேபோல ஆரோக்கியம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையால் பிற துறைகளை ஒப்பிட்டால் சிறிய அளவுக்கே சரிவை சந்திக்கும். ஒப்பீட்டளவில் சிறிய ஏற்ற இறக்கங்களைக் காண்கின்றன. இந்த துறைகள் மந்தநிலைகளின் போது சிறப்பாக செயல்படுகின்றன. இதன் விளைவாக அவற்றின் பங்குகள் கடந்த கால மந்த நிலைகளின்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் தொடர்வது பொருளாதார மந்த நிலைக்கான ஒரு சமிக்ஞையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+