சீனாவின் உகான் லேப்ல இருந்துதான்...கொரோனா வைரஸ் பரவியது...ஆதாரங்களை முன்வைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்:சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகங்களில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
உகான் ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்தது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது.

ஆட்டம் போடும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரசுக்கு அச்சாரம் போட்டதே சீனாதான். கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸ் உகான் நகரிலுள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், சீனா இதை திட்டமிட்டே பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வைரசை சீன வைரஸ் என்றே கூறி வருகிறார்.

சீனாதான் காரணம்
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொண்ட சர்வதேச வல்லுனர் குழு கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ளது. தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் ஆய்வுகளை அவர்கள் தொடங்க உள்ளனர். இந்த நிலையில் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகங்களில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

சந்தேகம் வலுத்துள்ளது.
இது தொடர்பாக மேலும் கூறியதாவது:- 2019-ம் ஆண்டின் நடுப்பகுதியில் உகான் ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே எங்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த 2016-ல் வுஹான் ஆய்வகத்தில் 2016-ல் பேட் கொரோனா வைரஸான RaTG13 சம்பந்தப்பட்ட சோதனைகளை மேற்கொண்டனர்.

மாதிரி ஒன்றாக உள்ளது
இந்த மாதிரி 2020 கொரோனா வைரசுக்கு(96.2%) ஒத்த மாதிரியாக உள்ளது. தொற்றுநோயின் தோற்றம் குறித்த வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை சீனா அரசு வேண்டுமென்றே தடுத்து வருகிறது. சீன ஆய்வக நிபுணர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறினார். அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் அதன்பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.

அழுத்தம் தர வேண்டும்
தொற்றுநோயின் தோற்றம் குறித்த வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை சீனா அரசு வேண்டுமென்ற தடுத்து வருகிறது. கொரோனா தோற்றம் குறித்து கூடுதல் தகவல்களை பெற உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு சீன அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என்று அமெரிக்க வெளியுறத்துறை கூறியது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications