"டார்கெட்".. சீனாவின் உளவு பலூன் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.. அமெரிக்காவின் 'பகீர்' ரிப்போர்ட்

"இந்த பலூன்கள் இந்தியா, வியட்நாம், தைவான்உள்ளிட்ட நாடுகளின் மீது பறந்துஅந்நாடுகளில் உள்ள ராணுவத் தளவாடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பியுள்ளது"

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தனது ராட்சத உளவு பலூன் மூலமாக சீனா வேவு பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பல அத்துமீறல்களை சீனா செய்து வரும் நிலையில், பலூன் மூலமாகவும் உளவு பார்த்திருப்பது நாட்டின் இறையாண்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சீனாவின் இந்த அராஜகத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பிற நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

 உலகை அச்சுறுத்தும் சீனா

உலகை அச்சுறுத்தும் சீனா

சமீபகாலமாக, சீனாவின் நடவடிக்கைகள் யாவும் பிற நாடுகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருபுறம், இந்தியா, தைவான், ஜப்பான் என ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடம் அத்துமீறி வரும் சீனா, மறுபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வட கொரியாவுடன் இணைந்து மறைமுகமாக மிரட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு வகையில் பிற நாடுகளுக்கு குடைச்சல் தருவதையே தனது முழுநேர வேலையாக வைத்துள்ளது சீனா.

பீதியை கிளப்பிய ராட்சத பலூன் பீதியை கிளப்பிய ராட்சத பலூன்

பீதியை கிளப்பிய ராட்சத பலூன் பீதியை கிளப்பிய ராட்சத பலூன்

அந்த வகையில், சீனா சமீபத்தில் செய்த செயல்தான் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவுக்கு சொந்தமான ராட்சத பலூன் ஒன்று அமெரிக்காவில் சுற்றி வந்ததுதான் இதற்கு காரணம். ஒரு ஆளில்லா விமானத்தின் மூலமாக இந்த ராட்சத உளவு பலூன் அமெரிக்காவின் பல்வேறு முக்கிய பகுதிகளை சுற்றி வந்ததை அந்நாட்டு விண்வெளித் துறையினர் கண்டுபிடித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த பலூனில், பல சக்திவாய்ந்த கேமராக்கள் உட்பட பல உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

சிக்கிய உளவுப்பெட்டி

சிக்கிய உளவுப்பெட்டி

அமெரிக்காவில் இருக்கும் முக்கிய ராணுவத் தளவாடங்கள் இருக்கும் மாகாணங்களை இந்த ராட்சத உளவு பலூன் சுற்றி வந்ததுதான் அந்நாட்டு அரசாங்கத்தை பீதியில் ஆழ்த்தியது. இதையடுத்து, தங்கள் விமானப்படை போர் விமானங்கள் மூலமாக அந்த பலூனை நேற்று முன்தினம் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து, அந்த பலூனின் எச்சங்கள் மற்றும் அதில் இருந்த உளவு பெட்டியை கைப்பற்றி அமெரிக்க ராணுவம் ஆய்வு நடத்தி வருகிறது.

 இந்தியாவை உளவு பார்த்த பலூன்

இந்தியாவை உளவு பார்த்த பலூன்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "சீனாவின் தெற்கு கடற்கரை மாகாணமான ஹைனன் மாகாணத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பல ராட்சத உளவு பலூன்களை அந்நாட்டின் விமானப்படை ஏவியிருக்கிறது. இந்த பலூன்கள் அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மீது பறந்து செனறு அந்நாடுகளில் உள்ள ராணுவத் தளவாடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பியுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது அமெரிக்க ராணுவ மற்றும் உளவுத் துறை உயரதிகாரிகளின் பேட்டிகளின் தொகுப்பாக இருக்கிறது. மேலும், அமெரிக்காவை இதுபோன்ற பல உளவு பலூன்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே உளவு பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+