Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் மல்லுக்கட்டிய ரஷ்யா - அமெரிக்கா.. எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலா உடனான எண்ணெய் வர்த்தக தடையை மீறியதாக கூறி ரஷ்யா கொடியுடன் அட்லான்டிக் கடலில் வலம் வந்த ‛பெல்லா - 1' எனும் எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை இன்று பறிமுதல் செய்தது. இந்த ‛பெல்லா -1' கப்பலை ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் உதவியுடன் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அமெரிக்கா - ரஷ்யா இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தார்.. அமெரிக்காவின் சிறப்பு படைகளை வெனிசுலாவுக்குள் அனுப்பி இந்த கைது நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தார்.

தற்போது நிகோலஸ் மதுரோ மற்றும் அவருடன் கைதான மனைவி ஆகியோர் அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

us-seized-russian-flagged-oil-tanker-in-atlantic-ocean-amid-of-russias-submarine-and-warship-close

முன்னதாக வெனிசுலாவை முடக்க டிரம்ப் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் உள்பட பிற வர்த்தகத்துக்கு தடை விதித்தார். இதற்கிடையே தான் ‛பெல்லா -1' எனும் எண்ணெய் கப்பல் அமெரிக்காவின் தடையை மீறி வெனிசுலாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா அட்லாண்டிக் கடலில் தீவிரமாக தேடிவந்தது.

இதன் தொடர்ச்சியாக அட்லான்டிக் கடலில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதாவது வெனிசுலாவுடன் தொடர்புடைய ரஷ்யாவின் கொடி பறக்கும் ‛பெல்லா 1' எனும் எண்ணெய் கப்பல் உள்ளே எதுவும் இல்லை. ஆனால் அந்த கப்பல் ரஷ்யாவின் கொடியுடன் அட்லாண்டிக் கடலில் பறந்தது.

இதனால் அந்த கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்வதை தவிர்க்கும் வகையில் ரஷ்யா களமிறங்கியது. ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பலை அனுப்பி ‛பெல்லா -1' எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கியது.

இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் ரஷ்யாவின் பாதுகாப்பு நடவடிக்கையை தாண்டி அமெரிக்கா அந்த எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்துள்ளது.

இதனை அமெரிக்காவின் ஐரோப்பிய படை (U.S. European Command)உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛அமெரிக்க நீதித்துறை, உள்நாட்டுப் பாதுகாப்பு துறை மற்றும் போர் துறை இணைந்து, அமெரிக்கத் தடைகளை மீறிய எம்/வி பெல்லா 1 கப்பலை இன்று கைப்பற்றியுள்ளன. அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான மன்ரோ கப்பலால் கண்காணிக்கப்பட்டு இந்தந டவகடி்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கப்பல் பறிமுதல் விவகாரத்தில் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா - ரஷ்யா இடையே நடுக்கடலில் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+