பேண்ட் கூட போடல.. டிரம்ப் பதவியேற்பு விழாவில் டவுசர் மட்டும் அணிந்து பங்கேற்ற நபர்! யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் டிப்டாப்பாக ஃபார்மல் உடையில் வந்திருந்தனர். ஆனால் ஒருவர் மட்டுமே கூலாக வெறும் டவுசர் மற்றும் வெறும் டீ சர்ட் உடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தார். யார் அந்த நபர் எதற்காக இப்படிப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை டிரம்ப் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் அந்நாட்டு சட்டப்படி தேர்தல் முடிந்திருந்தாலும் அடுத்த ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்க முடியும்.

donald trump inauguration donald trump elon musk

அதன்படி டிரம்ப் நேற்று ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். உள்ளூர் நேரப்படி சரியாக நேற்று நண்பகல் 12 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

டிரம்ப் பதவியேற்பு விழா:

வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை அங்கு கடும் குளிர் நிலவியதால் பதவியேற்பு விழா உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள ரோட்டுண்டா அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இணையத்தில் டிரெண்டிங்:

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உலகெங்கும் இருந்து வருகை தந்திருந்தனர். அனைவருமே கோட் சூட் என டிப்டாப்பாக உடை அணிந்திருந்தனர். ஆனால், ஒருவர் மட்டுமே டவுசர் மற்றும் வெறும் டீ சர்ட் உடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தார். அவ்வளவு குளிர் இருந்த நிலையில், அதையும் தாண்டி இவர் கேஷ்வலாக டவுசர் மட்டுமே அணிந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இவரது படங்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், யார் அந்த நபர்.. எதற்காக இப்படிப் பங்கேற்றார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

donald trump inauguration donald trump elon musk

ஜான் ஃபெட்டர்மேன்:

பதவியேற்பு விழாவில் இப்படி டவுசர் மட்டும் அணிந்து பங்கேற்றவரின் பெயர் ஜான் ஃபெட்டர்மேன். 55 வயதான ஜான் ஃபெட்டர்மேன் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து எம்பியாக இருக்கிறார். இவர் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்.. இதனால் ஏதோ எதிர்ப்பு தெரிவிக்க இதுபோல உடை அணிந்து வந்துள்ளார் என நினைக்க வேண்டாம். அவர் எப்போதுமே அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வரும் போதும் கூட இதுபோல கேஷ்வல் உடை தான் அணிவார். கடந்த காலங்களிலும் பல முறை இதுபோன்ற உடையை அவர் அணிந்துள்ளார்.

டவுசர் & டீ சர்ட்:

அதுபோலவே நேற்றைய தினமும் பதவியேற்பு விழாவுக்கு இவர் கேஷ்வல் உடையில் வந்திருந்தார். ஒட்டுமொத்த அரங்கும் கோட் சூட் உடன் டிப் டாப்பாக இருந்த போது, இவர் மட்டும் வெறும் டவுசர், டீ சர்ட் மட்டும் அணிந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவில் என்ன தான் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே மிகப் பெரிய பிளவு இருந்தாலும் கூட சில எம்பிக்கள் மட்டும் கட்சி பாகுபாடுகளைக் கடந்து செயல்படுவார்கள். ஜான் ஃபெட்டர்மேனும் கிட்டதட்ட அதுபோல தான். தான் ஜனநாயக கட்சி எம்பி மட்டுமில்லை ஒட்டுமொத்த பென்சில்வேனியா மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பி, எனவே கட்சி தாண்டி செயல்படுவதில்லை தவறு இல்லை எனப் பல முறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+