சொகுசு கப்பலில் திடீரென மோதிய டேங்கர் கப்பல்.. அலறிய பயணிகள்.. அமெரிக்காவில் பயங்கரம்.. வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சொகுசு கப்பல் ஒன்றின் மீது பயங்கரமாக மோதிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் ஓடும் மிசிசிப்பி ஆற்றில் அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொகுசு கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நின்றது. அப்போது அந்த வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் கப்பல் வந்து கொண்டிருந்தது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் கப்பல், நங்கூரமிட்டு இருந்த சொகுசு கப்பல் மீது மோதியது. இதில் சொகுசு கப்பல் கடும் சேதமடைந்தது. அதில் இருந்த பயணிகள் அலறியடித்து கப்பலை விட்டு வெளியே ஓடினர்.
ஆனால் அதற்குள் சொகுசு கப்பல் மூழ்க தொடங்கியது. கப்பலின் ஒருபகுதி மொத்தமாக தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கப்பலில் பயணித்த பயணிகளை, போராடி அவர்கள் அனைவரையும் மீட்பு குழுவினர் மீட்டனர்.
இதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
Watch the moment a tanker struck a cruise ship in New Orleans. Rescues are underway. 📷: Kern Studios https://t.co/ZPspGtM0Yr https://t.co/O1qGr8kImf
— wdsu (@wdsu) November 13, 2026
இதுபற்றி நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ, கூறுகையில், ''மீட்பு பணி நடந்து முடிந்துள்ளது. பயணிகள், பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று கூறினார். இதற்கிடையே தான் சொகுசு கப்பல் மீது டேங்கர் கப்பல் மோதும் காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
