வாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்
Recommended Video
வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் தலைநகரமாக வாஷிங்டன் டிசி நகரம் உள்ளது. இந்த நகரம் போடாமெக் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் அமெரிக்க நாட்டு மத்திய அரசின் தலைமையமான வெள்ளை மாளிகை உள்ளது. நம்மூர் டெல்லி போல் அமெரிக்காவின் மைய அரசின் நிர்வாகம் வாஷிங்டன் டிசியில் இயங்குகிறது.

இந்நிலையில் சற்று முன்பாக வாஷிங்டன் டிசி நகரில் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியாக தகவல்களை வெளியிடவில்லை.
இது தொடர்பாக பாக்ஸ் -5 சேனல் வெளியிட்டுள்ள தகவலின் படி 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications