Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்.. நள்ளிரவில் பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா தலைநகர் சேக்ரமென்டோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்தத் துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 அமெரிக்கா துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா துப்பாக்கிச் சூடு

கலிபோர்னியாவின் தலைநகர் சாக்ரமென்டோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் சாக்ரமென்டோவின் டவுன்டவுன் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்

உயிரிழப்புகள்

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர்களுக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்ட சூழலில், அங்கு விரைந்து சென்ற போலீசார் நிலைமை கட்டுப்படுத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆகும்.

வீடியோ

வீடியோ

இச்சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் மோசமாகக் காயமடைந்துள்ளதாக சேக்ரமெண்டோ மேயர் டாரெல் ஸ்டெய்ன்பெர்க் தெரிவித்தார்.

விசாரணை

விசாரணை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் சில திருடப்பட்ட கைத்துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இருந்து பெறப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளதாகவும் மேயர் டாரெல் ஸ்டெய்ன்பெர்க் தெரிவித்தார்.

 அமெரிக்கா துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்கா துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்காவில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவே நடைபெறுகிறது. அங்குத் துப்பாக்கிகளைப் பெறத் தேவையான கட்டுப்பாடுகள் குறைவு என்பதால் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் 23 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல 2021இல் 20 மில்லியனுக்கு மேல் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டது மட்டுமே. முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகளைச் சேர்த்தால் துப்பாக்கிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+