Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனிசுலா கச்சா எண்ணெய்.. இந்தியாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்! இதெல்லாம் ரொம்ப ஓவர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க, அமெரிக்க தடை விதித்திருந்தது. எனவே ரொம்ப காலத்துக்கு முன்னாடியே, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்திவிட்டோம். ஆனால், தற்போது மீண்டும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. ஆனால் இதற்கு கட்டுப்பாடுகள் என்கிற பெயரில் நிபந்தனைகளை விதித்துள்ளது.

வெனிசுலாவில் நடந்த பஞ்சாயத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், மறுபுறம் வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா கையில் எடுத்துக்கொள்ள தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான், வெனிசுலா எண்ணெய்க்கு டிரம்பின் ஒப்புதல் கொடுத்திருப்பது.

India Venezuela Trump

அமெரிக்காவின் ஒப்புதல்

அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள புதிய கட்டமைப்பின் கீழ், வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதித்துள்ளது. இது பல ஆண்டுகளாக அமெரிக்கத் தடைகளால் முடங்கிய வர்த்தகம் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவை காரணமாக எண்ணெய் கொள்முதலை மீண்டும் தொடங்குவது குறித்து, டிரம்ப் தலைமையிலான நிர்வாக மூத்த அதிகாரி பாசிட்டிவாக பதில் அளித்துள்ளார்.

டிரம்ப் ஆயுதம்

வெனிசுலாவில் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கிறது. இதனை பயன்படுத்தி, தனது கடன்களை அந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக அடைத்த வந்தது. இப்படி இருக்கையில்தான் உள்ளே புகுந்தார் டிரம்ப். கடந்த நூற்றாண்டில் அமெரிக்காதான் மொத்த உலகத்திற்கும் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டது. அதை அப்படியே மெயிண்டெயின் செய்ய வேண்டும் என்பது டிரம்பின் ஆசை. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் 'அமெரிக்கா பர்ஸ்ட்' எனும் கொள்கை.

அமெரிக்காவின் திட்டம்

உலகமே வெப்பத்தால் சூடாகிக்கொண்டிருக்கிறது, வாகனங்களை பெட்ரோல், டீசல் கொண்டு இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தின. எனவே உலக நாடுகள் EV வாகனங்களை நோக்கி நகர்ந்தன. மட்டுமல்லாது, கச்சா எண்ணெய், நிலக்கரி, நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் கேஸ் போன்றவற்றை பயன்படுத்துவதையும் தவிர்க்க தொடங்கின. இந்த மாற்றம் உற்பத்தி ஆலைகளையும் பாதித்தன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, போட்டி நாடுகளை முந்தி.. அமெரிக்காவை மீண்டும் டாப்புக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டார்.

தவறான ஐடியா

திட்டமெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக வகுக்கப்பட்ட ஐடியாக்கள்தான் ரொம்பவே தப்பாக உள்ளது. அதாவது, அமெரிக்காவில் இனி பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் ஆலைகளுக்கு அனுமதி அளித்தது. இதனால் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் தேவை அதிகரித்தது. இதை பெறுவதற்காகத்தான் வெனிசுலா அதிபரை டிரம்ப் கடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

சரி வெனிசுலாவில் பெறப்பட்ட எண்ணெய்யில் மீதியை என்ன செய்வது? விற்று காசு பார்க்க வேண்டியதுதான் என்று களமிறங்கியது அமெரிக்கா. எனவே இந்தியாவுக்கும் கச்சா எண்ணெய்யை விற்க முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் வர்த்தகம்

இதற்கு முன்பும் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தோம். ஆனால், அதெல்லாம் ரொம்ப தப்பு என டிரம்ப் கண்டிஷன் போட.. இந்தியாவும் கேட்டுக்கொண்டது. இப்போது மீண்டும் எண்ணெய்யை வாங்கிக்கொள்ள கோரியுள்ளது.

முன்பு எண்ணெய் வாங்கும்போது வெனிசுலா அரசுக்கு பணம் கொடுத்தோம். இந்த முறை, அமெரிக்காவின் கண்ட்ரோலில் உள்ள வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும். அந்த பணம் வெனிசுலா அரசுக்கு போகாது. மாறாக, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இப்படி எண்ணெய் வாங்குவதற்குதான் இந்தியாவுக்கு அமெரிக்கா ஒகே சொல்லியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+