வலுக்கும் இந்தியா - கனடா மோதல்.. அமெரிக்கா நிலைப்பாடு என்ன? ஜோ பைடன் ஆலோசகர் சொன்னதை நோட் பண்ணீங்களா
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் கனடா மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறிய தகவலை இங்கே பார்க்கலாம்.
காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது.

ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே கடும் மோதல் போக்கு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழல் நீடிக்கிறது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இப்படி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு ஏஜெண்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை தொடர்ந்து அமெரிக்கா, இந்த விவகாரத்தில் இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
இந்த விவகாரத்தில் சிறப்பு விதி விலக்கு எதுவும் அளிக்கப்படாது. எந்த நாடு பாதிக்கப்படும் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது கொள்கைகளை சார்ந்தே செயல்படும். இந்த விவகாரத்தில் கனடா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்திய அரசுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம்" என்றார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, கனடாவை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கனடாவில் இருந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் பற்றி கனடா அரசுக்கு ஆதராமளித்தும் நடவடிக்கை இல்லை. ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் கனடா இந்தியாவுக்கு வழங்கவில்லை.
கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்களை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
-
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications