அன்று ஜீரோ டிகிரிக்கு கீழ் பனிப்பொழிவு! இன்று சூறாவளி மழை! வைத்து செய்யும் வானிலை! திணறும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது தான் கிறிஸ்துமஸ் சமயத்தில் மிக மோசமான பனிப்பொழிவு வீசியது. இப்போது அங்கு கலிபோர்னியாவில் அடுத்தடுத்து புயல்கள் தாக்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில காலமாகவே மோசமான வானிலை நிலவி வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை சமயத்தில் அங்குப் பல இடங்களில் ஜீரோ டிகிரிக்கு கீழ் சென்று கடுமையான குளிர் நிலவியது இதில் பலர் உயிரிழக்கவும் செய்தனர்..
பெரும்பாலான கிழக்கு மாகாணங்கள் இனால் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு மெல்ல வானிலை சீரானது. இதனிடையே இப்போது கிழக்கு மாகாணமான கலிபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா
இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, பனி மற்றும் சூறாவளிக் காற்று ஆகியவை கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தியது. அங்கு மீண்டும் மற்றொரு புயல் தாக்க வாய்ப்பு உள்ளதால்.. வெள்ளம், மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல்
பசிபிக் பகுதியில் அதிகப்படியான ஈரப்பதம் அடுத்தடுத்து புயல்களை ஏற்படுத்துகிறது. இது அதிகப்படியான மழை மற்றும் பனிக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், சூறாவளிக் காற்றும் அங்குக் கடுமையாக வீசி வருகிறது. இந்த சூறாவளிக் காற்றால் கலிபோர்னியா தலைநகர் சேக்ரமெண்டோவில் பல மின்சார லைன்கள் அறுந்து விழுந்தன. இதனால் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3.50 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பல ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு சீரானது. இருப்பினும், இப்போது சுமார் 60 ஆயிரம் பேர் சேக்ரமெண்டோவில் இருளில் மூழ்கியுள்ளனர்.

சூறாவளிக் காற்று
மேலும், சூறாவளிக் காற்றால் பல இடங்களில் மரங்கள் அப்படியே வேரோடு சாய்ந்தது. அந்தளவுக்குச் சூறாவளிக் காற்று வலிமையுடன் இருந்தது. பல இடங்களில் வீடுகள் மீது மரங்கள் சாய்ந்துள்ளதால் பொதுமக்களின் வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல முக்கிய சாலைகளிலும் மரம் வோரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் குளிர் நிலவும் நிலையில், வீடுகளிலும் மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்கள் குளிரால் நடுங்கி வருகின்றனர்.

12 பேர் உயிரிழப்பு
இந்த மோசமான வானிலை காரணமாகக் கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் தெரிவித்துள்ளார். இத்துடன் புயல் பாதிப்புகள் ஓவர் என்று பொதுமக்கள் நினைத்த நிலையில், அதற்கு மாறாக வரும் நாட்களில் ஏற்படும் புயல் பாதிப்புகள் இதை விட ஆபத்தான இருக்கலாம் என்று எச்சரித்த ஆளுநர் கவின் நியூசோம், எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது என எச்சரித்தார். அதிலும் குறிப்பாக அடுத்த இரு நாட்கள் ரொம்ப கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எச்சரிக்கை
மின்சாரத் தடை, மரங்கள் சாய்வது, மோசமான பனிப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதாக வெள்ள பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 13,000 பேரை உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் சாக்ரமெண்டோ நகரத்திலிருந்து சுமார் 6,000 தென்கிழக்கே உள்ள வில்டனைச் சுற்றி வசிக்கும் மக்கள் வெள்ள ஆபத்து காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நிலைமை மோசமாகும் முன்பு அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் போதாது
அங்கு சாக்ரமெண்டோ உள்ளிட்ட பல இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதலே அடுத்த புயல் தாக்கத் தொடங்கிவிடும் என்பதால் பல இடங்களில் நிச்சயம் கனமழை பெய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.. கடற்கரைகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருகம்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி கனமழை பெய்தாலும் கூட கலிபோர்னியாவில் இப்போது மிகக் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டுவர இந்த புயல்கள் போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications