ஒரெயொரு கையெழுத்து.. உலக நாடுகளை அலறவிட்ட டிரம்ப்.. அமெரிக்காவால் கோடிக்கணக்கான மக்களுக்கு சிக்கல்
வாஷிங்டன்: இனி எந்த வெளிநாடுகளுக்கும் அமெரிக்காவின் நிதி உதவி என்பது கிடையாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவுரைப்படி இந்த உத்தரவு என்பது போடப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றபோதே இனி அமெரிக்க ராணுவம் பிற நாடுகளுக்கு உதவி செய்யாது. நாட்டை பாதுகாக்கும் பணியில் மட்டுமே ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறினார். அதோடு நாட்டை மீண்டும் பணக்கார நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூளுரைத்தார்.

அதன்படி அவர் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுப்படி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி அமெரிக்கா மூலம் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதி என்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவுக்கு கடந்த 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில் நேற்று முதல் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதாவது வெளிநாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அதிகளவில் நிதி ஒதுக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். வேறு எந்த நாடும் நிதி ஒதுக்குவது இல்லை. கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அமெரிக்காவின் மொத்த பட்ஜெட்டில் 1 சதவீதமாகும். இந்த நிதி மூலம் அமெரிக்கா தனது நட்பு நாடுகள் மட்டுமின்றி பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகிறது.
அதாவது உலக அளவில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைக்கான பயிற்சி, ஊழல் ஒழிப்பு, பாதுகாப்பு துறை சார்ந்த உதவிகளை பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் (ஸ்டேட் செக்ரட்டரி) மார்கோ ரூபியோ சார்பில், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு உதவி செய்யும் வகையிலான அனைத்து நிதியும் நிறுத்தப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவசர கால உணவு திட்டம், போர் நடக்கும் சூடானில் மக்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கு அமெரிக்காவின் உதவி என்பது வழங்கப்பட உள்ளது. அதேபோல் பல நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு துறை சார்ந்த உதவிகளை வழங்குகிறது. இனி இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய 2 நாடுகளுக்கு மட்டுமே ராணுவ உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு இந்த உதவிகள் கிடைக்காது. இதனால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
அதாவது அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் ஏய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் அதிபரின் அவசர நிவாரண திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நிதி என்பது செலவிடப்படும். இது குடியரசு கட்சியின் அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் சார்பில் தொடங்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. PEPFAR என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் 55 லட்சம் குழந்தைகள் உள்பட 25 லட்சம் பேரின் உயிர்களை அமெரிக்கா காப்பாற்றி உள்ளது. இது உலகளவில் அமெரிக்காவுக்கு புகழை தேடி தந்தது. இப்போது இந்த திட்டத்துக்கு உதவி என்பது கிடைக்காது. இதுதவிர இன்னும் அமெரிக்கா சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி உதவி நிறுத்தப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
இதுபற்றி ஆக்ஸ்பாமின் அமெரிக்காவின் தலைவர் அப்பி மேக்ஸ்மேன் கூறுகையில், ‛‛வெளிநாடுகளுக்கான நிதி உதவியை உடனடியாக நிறத்துவது என்பது உலகம் முவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று குடும்பம் குடும்பமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி பலர் இறப்புகளையும் சந்திப்பார்கள். வெளிநாடுகளுக்கான நிதி உதுவியை நிறுத்தி வைப்பதன் மூமல் டிரம்ப் அரசு ஏற்கனவே நெருக்கடியில் வாழும் மக்களை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது'' என்று அச்சம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications