US Tariff: டிரம்ப் முகத்தில் கரி பூசிய இந்தியா! ரஷ்யாவிடம் அமெரிக்கா வாங்கும் பொருட்கள் என்னென்ன? இதோ டேட்டா
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 50 சதவீதம் அளவுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார். ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் வாங்கி வருகிறது. இதுபற்றிய கேள்விக்கு அதுபற்றி எனக்கு தெரியாது என்று டிரம்ப் பதிலளித்தார். ஆனால் உண்மையில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான பொருட்களை வாங்கி வருகிறது. அது என்னென்ன? இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி டிரம்பின் மூச்சில் கரி பூசப்பட்டுள்ளது. அதோடு டிரம்பின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
* அதன்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (Office of the United States Trade Representative s) தரவுகளின்படி 2024 ல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான மொத்த வர்த்தகம் சுமார் 5.2 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
* இந்த 5.3 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் 3.5 பில்லியன் டாலர் என்பது பொருட்களுக்கான வர்த்தகமாக உள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதி 528.3 மில்லியன் டாலராகவும், ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 3 பில்லியன் டாலராகவும் உள்ளது. இதனால் ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 2.4 பில்லியன் டாலருக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.

* கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதனை அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியகம் மற்றும் பொருளாதார பகுப்பாய்வு பணியகத்தின் (US Census Bureau and the Bureau of Economic Analysis) சமீபத்திய டேட்டா உறுதி செய்கிறது.
* அமெரிக்க மக்கள்தெகை கணக்கெடுப்பு பணியகம் மற்றும் பொருளாதார பகுப்பாய்வு பணியகத்தின் டேட்டாப்படி 2025 முதல் பாதியில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 2.5 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 14.14 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து இருந்து கணிசமாகக் குறைந்துள்ளது.
* மேலும் 2022 ஜனவரி முதல் அமெரிக்கா ரஷ்யாவிலிடமிருந்து மொத்தம் 24.51 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
உரம் - யுரேனியம் - புளூட்டோனியம்
* பொருட்கள் வாரியாக பார்த்தால் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிடம் இருந்து உரத்தை அதிகமாக வாங்கி உள்ளது. 2024ல் 1.27 பில்லியன் டாலர் மதிப்புள்ள உரங்களை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. 2021ல் 1.14 பில்லியன் டாலராக உர இறக்குமதி இருந்த நிலையில் அதிகரித்துள்ளது.
* யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தை எடுத்து கொண்டால் 2024ல் 624 மில்லியன் டாலருக்கு ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா வாங்கியது. இது 2021ல் 646 மில்லியன் டாலராக இருந்தது.
* பல்லேடியம் என்று வந்தால் கடந்த 2024 ல் அமெரிக்கா 878 மில்லியன் டாலருக்கு ரஷ்யாவிடம் வாங்கி உள்ளது. இது கடந்த 2021ல் இருந்த 1.59 பில்லியன் டாலரை விட குறைவாகும்.
50 சதவீத வரி போட்ட டிரம்ப்
இப்படி உக்ரைன் மீது போர் தொடர்ந்து வரும் நிலையிலும் கூட அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பது போல் விதித்து விட்டு தனக்கு தேவையான பொருட்களை மட்டும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி கொள்கிறது. இப்போதும் இது தொடர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் ரஷ்யா உடனான வர்த்தகத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை போட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி இந்தியா மீது 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு 7 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். மேலும் இடைப்பட்ட காலத்திலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறினார். ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. தேச நலன் தான் முக்கியம் எனக்கூறி ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இதையடுத்து இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதில் கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வரி விதிப்புக்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருட்களை வாங்குகின்றன. அப்படி இருக்கும்போது இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் டிரம்ப் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.
இந்தியா வைத்த புள்ளிவிவரம்
மேலும் இந்தியா சார்பில், ‛‛தேசிய நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இந்தியா - ரஷ்யா உறவு என்பது காலத்தால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. சந்தை சூழல்கள் காரணமாகவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க நேர்ந்ததாகவும் அப்போது அதை ஆதரித்த மேற்குலக நாடுகள் அப்போது எதிர்ப்பது சரி இல்லை என்றும் விமர்சித்தது.
மேலும், அணுசக்தித் துறைகளுக்கான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சார வாகனங்களுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற முக்கிய பொருட்களை அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது'' என்று நம் நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவால் டிரம்ப்புக்கு போன கேள்வி
நம் நாட்டின் இந்த கருத்துக்கு டொனால்ட் டிரம்ப் ஊமையானார். இந்நிலையில் தான் அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா பொருட்களை இறக்குமதி செய்வது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டவுடன் டிரம்பின் முகம் மாறியது. மேலும், ‛‛எனக்கு அதுபற்றி எதுவும் தெரிவயாது. நான் இதை சரிபார்க்க வேண்டும்'' என்று கூறி நழுவினார். டிரம்பின் இந்த பதிலை பலரும் விமர்சனம் செய்தனர். அமெரிக்காவின் அதிபராக இருந்து கொண்டு ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யப்படுகிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லையே என பலரும் டிரம்பை சாடி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் மேற்கூறிய ரஷ்யா - அமெரிக்கா வர்த்தகம் தொடர்பான டேட்டா வெளியாகி உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்புக்கு நம் நாட்டின் வளர்ச்சி தான் பிடிக்கவில்லை. இதனால் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக நொண்டி காரணத்தை கூறிவிட்டு 50 சதவீத வரிகளை விதித்துள்ளதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications