இந்தியா + 59 நாடுகளுக்கு.. 10% டூ 12.5% வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. காரணத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் நம் நாட்டிற்கு 10 சதவீத கூடுதல் வரியை டிரம்ப் மீண்டும் விதித்துள்ளார்.நம் நாட்டில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக கூறி இந்த வரியை விதித்துள்ளார். இந்தியா மட்டமின்றி பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உள்பட மொத்தம் 60 நாடுகளுக்கு டிரம்ப் இப்படியான வரியை விதித்துள்ளார். அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

us-tariff-us-impose-10-percent-tariff-on-imported-goods-from-india

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்நாட்டிற்கு தொடர்ந்து பல்வேறு வரிகளை விதித்தார். மொத்தம் 50 சதவீதம் வரை வரி விதித்தார். அதன்பிறகு பல்வேறு காலக்கட்டங்களில் இந்த வரிகள் குறைக்கப்பட்டது. தற்போது நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வரியாக உள்ளது. இதுவும் தற்காலிக வரியாகும்.

இந்த தற்காலிக வரிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த வரி குறைக்கப்படுமா? அல்லது அதிகரிக்கப்படுமா? என்ற பரபரப்பு தொற்றி கொண்டது.

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நம் நாட்டின் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்புக்கான அறிவிப்பு நம் நாட்டின் நேரப்படி காலை 9.31 மணிக்கு டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். இது நேற்றைய தேதியில் முன்தேதியிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கட்டாய உழைப்பை (Forced Labour) பயன்படுத்தி பொருட்கள் தயாரிப்பாக குற்றம்சாட்டி அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளது.

இந்த வரி என்பது வர்த்தக சட்டம் 1947 பிரிவு 301ன் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிர் கூறுகையில்,
''கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாக தடை விதித்துள்ளது. இதனை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. எங்களின் வர்த்தக பங்காளிகளும் அதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது'' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நம் நாட்டிற்கு தற்காலிக வரியாக அமெரிக்கா 10 சதவீத வரியை விதித்து இருந்தது. இந்த வரி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அதனை முன்தேதியிட்டு டிரம்ப் மீண்டும் செயல்படுத்தி உள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு நாம் செலுத்த வேண்டிய வரி என்பது அதிகரிக்காது. மாறாக அப்படியே 10 சதவீதமாக தொடர உள்ளது.

மேலும் டிரம்பின் இந்த வரி விதிப்பில் இந்தியா மட்டும் சிக்கவில்லை. மொத்தம் 60 நாடுகள் சிக்கி உள்ளன. அதன்படி இந்த 10 சதவீத வரி லிஸ்ட்டில் இந்தியா உடன் அர்ஜென்டினா, வங்கதேசம், பிரிட்டன், கனடா, இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை உள்பட 18 நாடுகள் உள்ளன.

அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, தைவான், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரையும், சீனாவிற்கு 12.5 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+