அடேங்கப்பா.. என்னா அடி! 5 வயது சிறுவன் அடித்ததில் அப்படியே மயங்கிய ஆசிரியர்? நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில், கன்கஷன் ஏற்பட்டு ஆசிரியை மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் பெம்ப்ரோக் பைன்ஸ் நகரில் இருக்கும் போலீசாருக்கு கடந்த வாரம் அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது, அதைக் கேட்டு போலீசார் முதலில் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் அவசர அழைப்பு பெம்ப்ரோக் பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் இருந்து. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு என்ன நடந்தது என விசாரிக்கத் தொடங்கினர்.

 மயங்கி நிலை

மயங்கி நிலை

போலீசார் அந்த இடத்திற்குச் சென்ற போது ஆசிரியர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். மேலும், அவசர மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போதும், ஆசிரியர் பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு இருந்த சிறு மைதானத்தில் சுவரில் மீது சாய்ந்த நிலையில், எவ்வித சுயநினைவும் இல்லாத வகையில் அவர் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்த போது, அவர் ஆபத்தான நிலையில் இருந்தது தெரிய வந்தது.

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதையடுத்து ஆசிரியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு என்ன தான் நடந்தது என போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் அந்த பள்ளியில் உள்ள ஐந்து வயது சிறுவன் தாக்கியதில், ஆசிரியை கன்கஷன் ஏற்பட்டு மயங்கியது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அங்கு மாற்றுத்திறனாளிகள் படிக்கும் சிறப்பு பள்ளியில் நடந்துள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

கடந்த வாரம் பள்ளி தொடங்கியதும், இரண்டு மாணவர்கள், வகுப்பறையில் இருந்த பொருட்களைத் தூக்கி வீசியுள்ளனர். இதையடுத்து அவர்களை சாமதானப்படுத்திய ஆசிரியர் அவர்களை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த 5 வயது சிறுவன், ஆசிரியரை கையால் தாக்கியதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஆசிரியருக்கு கன்கஷன் ஏற்பட்டு, அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

 சிறப்புப் பள்ளி

சிறப்புப் பள்ளி

இதையடுத்து அந்த மாணவரிடம் போலீசார் விசாரணையை நடத்தி உள்ளனர். இருப்பினும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புளோரிடாவில் இருக்கும் சட்டப்படி மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் உதவ கற்றுக் கொள்ள மாற்றுத்திறனாளிக்கு எனத் தனிப் பள்ளிகள் உள்ளது. அப்படி பெம்ப்ரோக் பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+