தினமும் 1 லட்சம் கேட்டாலும் கொடுக்க ரெடி! "இந்தியர்கள் முக்கியம்.." H-1B விசா.. அமெரிக்க CEO திட்டவட்டம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், அதற்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டணம் எந்தளவுக்கு உயர்ந்தாலும் கூட ஹெச்-1பி விசாவின் தேவைகள் குறையாது என்று மெட்டாவியூ ஏஐ நிறுவன இணை நிறுவனர் ஷாரியார் தாஜ்பாக்ஷ் கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு லட்சம் டாலர் கேட்டாலும் அதைக் கொடுக்க ரெடியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, அவர் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராக மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக ஹெச்-1பி விசாவுக்கான விதிகள் கடுமையாகியுள்ளன.

இதற்கு முன்பு அமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணம் 3000 முதல் 5000 டாலராக இருந்தது. இந்தச் சூழலில் தான் அதை அவர் ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். இதனால் ஹெச்-1பி விசா குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே ஹெச்-1பி விசா தொடர்பாக மெட்டாவியூ ஏஐ நிறுவன இணை நிறுவனர் ஷாரியார் தாஜ்பாக்ஷ் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஹெச்-1பி விசா
டிரம்ப் விசா கட்டணத்தை உயர்த்தினாலும் கூட ஹெச்-1பி விசா எண்ணிக்கை குறையாது என்று ஷாரியார் தாஜ்பாக்ஷ் தெரிவித்தார். தினசரி ஒரு லட்சம் டாலர் கேட்டால் கூட ஹெச்-1பி விசா எண்ணிக்கை குறையாது என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், ஷாரியாரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டிரம்ப் ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி இருந்தார். இந்தக் கட்டணம் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டும் நிலையில், இதை மாற்றி ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என நெட்டிசன் ஒருவர் வலியுறுத்தி இருந்தார்.
எவ்வளவு கேட்டாலும் தருவோம்
அதற்குப் பதிலளித்த ஷாரியார் தாஜ்பாக்ஷ், "ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சொன்னாலும் எதுவும் மாறாது. நீங்கள் தினசரி ஒரு லட்சம் டாலர் சொன்னாலும் கூட அதைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். திறமையான ஊழியர்கள் கிடைப்பதில் இங்குச் சிக்கல் இருக்கிறது. அதற்கு எவ்வளவு கட்டணம் கேட்டாலும் அதைத் தர நிறுவனங்கள் தயாராகவே இருக்கும். நாங்கள் இன்னுமே பல வெளிநாட்டு ஊழியர்களை எங்கள் நிறுவனத்திற்கு வேலைக்குக் கூட்டி வருகிறோம். ஏஐ வந்தாலும் கூட திறமையான ஊழியர்களுக்குத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். ஏஐ தானா கோடிங் போடாது" என்றார்.
திறமைக்கு விலை இல்லை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தத் திறமையான ஊழியர்கள் உருவாக்குவது முக்கியமானது. அவர்களின் கடின உழைப்பால் உருவாகும் விஷயங்களுக்கு முன்பு, ஒரு லட்சம் டாலர் என்பது பெரிய விஷயம் இல்லை.. உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு இல்லாமல் சிறந்த விஷயங்களை உருவாக்க முடியாது. இதற்கு ஷாட் கட் எதுவும் கிடையாது. திறமையான ஊழியர்களை அழைத்து வரப் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். அந்த இடத்தில் பணத்தைச் சேமிக்க முயல்வது பொறுப்பற்ற செயல். அமெரிக்க அரசு என்ன உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் ஹெச்-1பி விசாவுக்கான விண்ணப்பம் குறையாது" என்றார்.
இந்தியர்கள்
ஹெச்-1பி விசாவை பொறுத்தவரை அதில் அதிகம் பலன் பெறுவது இந்தியர்களாகவே உள்ளனர். ஒட்டுமொத்த ஹெச்-1பி விசாவில் சுமார் 70% இந்தியர்களே பயன்படுத்தும் நிலையில், கட்டண உயர்வால் பல சிக்கல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஷாரியார் தாஜ்பாக்ஷ் சொல்வதை வைத்துப் பார்த்தால் விசா எண்ணிக்கை பெரியளவில் குறையாது என்றே தெரிகிறது. மேலும், இவரது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு இந்தியர்களை ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவில் வேலைக்கு எடுப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி











Click it and Unblock the Notifications