நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே
வாஷிங்டன்: நேட்டோ அமைப்பை மிக கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் நேட்டோ உறுப்பு நாடுகளைக் காகிதப் புலி எனச் சீண்டியுள்ளார். மேலும், நேட்டோ அமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாகத் தீவிரமாகவே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகினால் அது சர்வதேச அளவில் பேசுபொருளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறும் டிரம்ப், நேட்டோ நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார். இருப்பினும், அவை உதவ மறுத்தே வருகின்றன. இதற்கிடையே நேட்டோ மீது டிரம்ப் மீண்டும் பாய்ந்துள்ளார். ஈரான் மீதான போருக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பை "காகிதப் புலி" என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேட்டோ
நேட்டோவில் அமெரிக்கா தொடர்வது குறித்து பரிசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கு டிரம்ப், "அது பரிசீலனை நிலையைத் தாண்டிவிட்டது. தீவிரமாக அது குறித்து யோசித்து வருகிறேன். நேட்டோவில் அமெரிக்கா இருக்க வேண்டும் என ஒருபோதும் நான் சொன்னதே இல்லை. அவர்கள் ஒரு காகிதப் புலி என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். புதினுக்கும் கூட அது தெரியும்" என்று குறிப்பிட்டார்.
ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. ஹார்முஸை மீண்டும் திறக்க போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற டிரம்ப் நேட்டோ நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், இந்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. இதனால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் விலை எக்குத்தப்பாக உயர்ந்தது. இது சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் ஆபத்து உருவானது. இதன் காரணமாகவே டிரம்ப் நேட்டோ நாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தேவையில்லை
அவர் மேலும், "அவர்கள் இங்கு நமக்காக வரவில்லை என்பது முதலில் நம்புவதற்குக் கடினமாக இருந்தது. நான் இது தொடர்பாக வலியுறுத்தவில்லை. இது தானாகவே நடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும், உக்ரைன் உட்பட எந்தவொரு விஷயத்திலும் நாம் தானாகவே சென்று உதவினோம். உக்ரைன் நமது பிரச்சனை இல்லை தான். ஆனாலும் உதவினோம். உக்ரைன் ஒரு சோதனையை எதிர்கொண்ட போது நாம் அவர்களுக்காக அங்கே இருந்தோம்.. ஆனால், அவர்கள் (நேட்டோ) தான் நமக்காக வர மறுக்கிறார்கள்" என்றார்.
ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட மறுத்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். பிரிட்டனைக் கடுமையாக விமர்சித்த அவர், "உங்களிடம் கடற்படை கூட ஒழுங்காக இல்லை. உங்களிடம் இருக்கும் எல்லாமே பழையவை.. வேலை செய்யாத விமானம் தாங்கி கப்பல்களும் சில வயதான வீரர்களும் மட்டுமே உங்களிடம் உள்ளனர்" என்றார்.
முதல்முறை இல்லை
நேட்டோவில் இருந்து வெளியேறுவது தொடர்பாக அமெரிக்கா இதுபோன்ற கருத்துகளைச் சொல்வது இது முதல்முறை இல்லை. முன்னதாகவே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரான் போர் முடிந்தவுடன் நேட்டோவுடனான உறவை அமெரிக்கா மறுமதிப்பீடு செய்யும் என குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும், "நேட்டோவுக்கு நாம் உதவுகிறோம். ஆனால், நமக்கு அவர்கள் உதவுவது இல்லை. நேட்டோ ஒரு வழிப்பாதை போலத் தான் எங்களுக்குத் தெரிகிறது.. துரதிர்ஷ்டவசமாக, இந்த மோதல் முடிந்தவுடன், நேட்டோ உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கூட்டணியின் கீழ் நேட்டோ நமது நாட்டிற்கு என்ன தருகிறது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
நேட்டோ
உலக நாடுகளுக்குக் கூட்டு பாதுகாப்பை வழங்கவும் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் ஒன்றியம் மேலும் பரவாமல் இருக்கவும் உருவாக்கப்பட்டதே நேட்டோ. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகள் இதில் உள்ளனர். இதன் விதிகளின் கீழ் ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதுவே நேட்டோவின் மிக முக்கியமான விதியாகும். நேட்டோவின் மிக முக்கிய உறுப்பினராக அமெரிக்கா உள்ள சூழலில், அதில் இருந்து விலகவுள்ளதாக டிரம்ப் சொல்லியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
-
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications