போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா.. படைகளை இறக்கிய டிரம்ப்? உச்சக்கட்ட பதற்றம்.. என்ன நடக்கிறது?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட மோதல்களைத் தடுக்கத் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கிடையே அதே டிரம்ப் இப்போது ஒரு நாட்டின் மீது போரை அறிவிக்கப் போகிறாராம். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதலை ஆரம்பிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கரீபியன் நாடுகளில் ஒன்று வெனிசுலா.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையைச் சுமார் 3 கோடி தான். இதற்கிடையே இந்த வெனிசுலா நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. வெனிசுலா மீது டிரம்ப் போரை ஆரம்பிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படை குவிக்கப்பட்டு வருகிறது.

வெனிசுலா விவகாரம்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் போதைப்பொருள் வருவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் மட்டும் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக்கில் போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி, அமெரிக்கா குறைந்தது 21 வெனிசுலா படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களில் இதுவரை சுமார் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் என ட்ரம்ப் இதை நியாயப்படுத்துகிறார். இருப்பினும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எந்தவொரு ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. மேலும், அமெரிக்காவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து அதிகளவில் போதைப் பொருள் செல்லவில்லை. வேறு சில நாடுகளில் இருந்தே அதிகளவில் போதைப் பொருள் போகும் நிலையில், அவர் வெனிசுலாவை மட்டும் குறிவைப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
படைகள் குவிப்பு
ஏற்கனவே வெனிசுலா அருகே அமெரிக்கப் படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் வெனிசுலா மீது அமெரிக்கா போரை ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. டிரம்ப் சீக்கிரமே போர் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான கேள்விகளுக்கு டிரம்ப் வழக்கம் போல முரண்பட்ட தகவல்களையே கூறி வந்துள்ளார். வெனிசுலா மீதான போர் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று சொன்ன அவர், அடுத்த வரியே இப்போது வெனிசுலாவில் இறங்கித் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மறுத்தார்.
அதேநேரம் சிஐஏவின் சீக்ரெட் ஆபரேஷனுக்கு டிரம்ப் அனுமதி கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. இதைச் சுட்டிக்காட்டிய வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தனது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே டிரம்பின் உண்மையான நோக்கம் என்று சாடினார். அதுபோல எந்தவொரு முயற்சியையும் தங்கள் நாடு கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
என்ன நடக்கும்
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடிவு செய்தால்.. அதற்குப் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. பெரும்பாலும் விமானப்படை அல்லது கடற்படை மூலமாகவே தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதற்கேற்ப அமெரிக்கா கடற்படையும் கடந்த சில மாதங்களில் பல கப்பல்களை அங்கு நிறுத்தியுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஃபோர்ட் உட்பட பல கப்பல்கள் வெனிசுலா கடலோரம் கரீபியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது..
உண்மை காரணம்?
வெனிசுலாவில் மிகப் பெரிய எண்ணெய் வளம் இருக்கும் நிலையில், அதற்காகக் கூட அமெரிக்கா போரை ஆரம்பிக்க முனைப்பு காட்டலாம் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், சிறிய நாடுகள் மீது அமெரிக்கா போரை ஆரம்பித்த போதெல்லாம் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. வியட்நாம் போர், ஆப்கான் போர் உள்ளிட்டவற்றை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இதனால் வெனிசுலா மீதான அமெரிக்கா போரை ஆரம்பிக்கக்கூடாது என்றே அமெரிக்காவில் குரல்கள் எழுந்துள்ளன.
உலக நாடுகள்
ஒரு வேலை போர் ஆரம்பித்தால் பெரும்பாலான உலக நாடுகள் அமெரிக்காவின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும். குறிப்பாக வெனிசுலாவுக்கு அதிகளவில் கடன் கொடுத்துள்ள நாடான சீனா, அமெரிக்காவைக் கண்டிக்கும். வெனிசுலாவுக்கு முழு ஆதரவு கொடுக்கும். இருப்பினும், போரில் நேரடியாகத் தலையிட மாட்டார்கள். அதேநேரம் ரஷ்யாவுக்கும் வெனிசுலாவுக்கும் பல ஆண்டுகளாக ராணுவ உறவு இருக்கிறது. இதனால் ரஷ்யா ஆயுதங்களைக் கொடுத்து உதவலாம் எனத் தெரிகிறது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications