கொத்து கொத்தாக வீரர்களை புதைப்பது எப்படி? அமெரிக்கா ராணுவத்துக்கு பயிற்சி! ஈரான் மீது பெரிய போர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு ஈரான் மீது கொடூர தாக்குதலை நடத்தும் வகையில் அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கலாம் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில் தான் 1950-53 காலக்கட்டத்தில் நடந்த கொரிய போருக்கு பிறகு முதல் முறையாக கொத்து கொத்தாக ராணுவ வீரர்களை புதைப்பது எப்படி? என்பது குறித்த பயிற்சி அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் அச்சம் உள்ளது.

us donald trump iran

குறிப்பாக நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதி காத்து வருகிறார். ஆனால் இடைக்கால தேர்தல் முடிவடைந்த பிறகு அமெரிக்க படைகள் மீண்டும் ஈரான் மீது போரை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக அமெரிக்க ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை தீவிரமாக தயாராகி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதோடு, கண்காணிப்பு பணி தீவிரமாகி உள்ளது. அதேபோல் விமானம் தாங்கும் போர்க்கப்பலும் தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமானப்படை தளம், ராணுவ தளங்களில் போர் விமானங்கள், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளன.இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. 1950-53 கொரிய போருக்குப் பிறகு முதன்முறையாக ராணுவ வீரர்களை கொத்து கொத்தாக புதைப்பது எப்படி? என்பது தொடர்பான பயிற்சியை அமெரிக்கா தனது ராணுவ வீரர்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது.

இந்த பயிற்சி என்பது போர்க்களத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படும் சூழலில், வீரர்களின் உடல்களை முறையாக கையாள்வதற்கும், அடையாளம் காண்பதற்கும், அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்துவதற்கும் தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அமெரிக்க ராணுவம் எதிர்கால போர் நடவடிக்கையையும், அதில் ஏற்படும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளையும் மனதில் வைத்து இந்த பயிற்சியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை 'நியூஸ்வீக்' செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், '' 'ஆபரேஷன் டிராகன் கோவனன்ட் பேஸ் II' (Operation Dragon Covenant Phase II) என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சிகள் கடந்த மாதம் தொடங்கின. வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக் தளத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 3-வது கார்ப்ஸ் சஸ்டைன்மென்ட் கமாண்ட் மற்றும் 20-வது இன்ஜினியர் பிரிகேட் பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடைசியாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு 1950-53 காலக்கட்டத்தில் நடந்த கொரிய போரின் போது இப்படியான பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் முதல் முறையாக பயிற்சி வழங்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஈரான் மீது அமெரிக்கா போரை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த போர் மிகவம் கடுமையானதாக இருக்கும் எனவும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானை பணிய வைக்கும் வகையில் இந்த போர் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தான் போர் களத்தில் உயிரிழக்கும் வீரர்களின் உயிர்களை புதைக்க அமெரிக்க படையினருக்கு பயிற்சி தொடங்கி உள்ளது. இதனால் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மிகவும் கொடூரமானதாக இருக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+