மண்டியிட்ட அமெரிக்க படை வீரர்கள்.. புதின் விமானம் தரையிறங்கியபோது நடந்த சம்பவம்.. கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலஸ்காவில் சந்தித்து பேசினர். அலஸ்கா விமான நிலையத்தில் புதின் விமானம் தரையிறங்கியதும், அமெரிக்க படை வீரர்கள் மண்டியிட்டது தொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த இருநாடுகளிடமும் பேசி வருகிறார்.

us-troops-kneel-down-to-roll-out-red-carpet-for-vladimir-putin-who-landing-alaska-for-donald-trump-m

இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து நேற்று விளாடிமிர் புதின் - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

அமெரிக்காவின் அலஸ்காவில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் மூடிய அறையில் சுமார் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது விளாடிமிர் புதின், ‛‛போர் நிறுத்தத்தை ஐரோப்பா சீர்குலைக்க வேண்டாம். அடுத்த சந்திப்பு ரஷ்யாவில் நடக்கும். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்திருந்தால் இந்த போர் வந்திருக்காது'' என்று கூறினார். டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛நிறைய விஷயங்களை பேசினோம். இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது தொடக்கப்புள்ளி தான். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது'' என்றார்.

இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலை தான் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா சென்ற புதினுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. புதின் தரையிறங்கியதும், அவருக்கு அமெரிக்காவின் பி2 ஸ்டெல்த் பாம்பர்ஸ் மற்றும் எப் 22 ராப்டர் ரக போர் விமானங்கள் பறந்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. விமானத்தில் இருந்து புதின் இறங்கி சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார். மறுபக்கம் புதினுக்காக சிவப்பு கம்பளத்தில் டிரம்ப் காத்திருந்தார். அதன்பிறகு இருவரும் கைக்குலுக்கினர். டிரம்ப், புதினின் தோளில் தட்டி வரவேற்றார். அதன்பிறகு இருவரும் ஒரே காரில் சென்றனர். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டிரம்பின் காரில் விளாடிமிர் புதின் ஏறினார். புதினும், டிரம்பும் பின் இருக்கையில் ஒன்றாக அமர்ந்து பயணித்தனர்.

இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் ஒரு போட்டோ பரவி வருகிறது. அதாவது புதின் சென்ற விமானம் அலஸ்காவில் தரையிறங்கியதும் விமானத்தில் இருந்து சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அப்போது புதின் விமானத்தின் முன்பு அமெரிக்க படை வீரர்கள் மண்டியிட்டப்படி இருந்தனர். இந்த போட்டோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். புதின் ஆதரவாளர்களும், அமெரிக்க படைகளை புதின் மண்டியிட வைத்தார் என தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் உக்ரைனை சேர்ந்தவர்களும் டிரம்ப் - புதின் சந்திப்பை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அழைக்காத காரணத்தால் புதினுடன், டிரம்ப் கூட்டு சேர்ந்ததாக தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அந்த போட்டோவை பகிர்ந்து உக்ரைன் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஸ்தபா நயீம், ‛‛மண்டியிடுவதை மீண்டும் சிறப்பானதாக மாற்றுங்கள்'' என்று அமெரிக்காவை சீண்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+