"சைவ உணவுகளே பெஸ்ட்.. சாப்பிட்டு பாருங்க புரியும்!" அமெரிக்க துணை அதிபராக தேர்வான வான்ஸ் புகழாரம்
வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள ஜே.டி. வான்ஸ், தான் முழுக்க முழுக்க சைவ உணவு முறைக்கு மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சைவ உணவுகளே சிறந்தது என்றும் அதைச் சாப்பிட்டுப் பார்த்தால் அது எந்தளவுக்குச் சுவையானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜே.டி. வான்ஸும் வென்றுள்ளார். ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

சைவ உணவுகள்: இதற்கிடையே அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸ், இந்தியச் சைவ உணவுகள் தான் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இருவரும் டேட்டிங் செய்யும் போது உஷாவுக்கு முதல்முறை சைவ உணவைச் சமைத்துக் கொடுத்ததாகவும் இருப்பினும் முதல்முறை அது மிக மோசமாகப் போய்விட்டதாகவும் வான்ஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் வான்ஸ் தனது உணவுப் பழக்கம் குறித்தும் உஷா தனது வாழ்க்கையில் வந்த பிறகு உணவுப் பழக்கம் எந்தளவுக்கு மாறியது என்பது குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்திருந்தார். உஷா வந்த பிறகு பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டதாகவும் சைவ உணவுகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் என்பது அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட குப்பை என்று சொல்லலாம். அதில் வேறு எந்தவொரு சத்துக்களும் இருப்பதில்லை. நான் கடந்த சில ஆண்டுகளாகவே சைவ உணவுகளை அதிகளவில் சாப்பிட்டு வருகிறேன்" என்றார். அப்போது நெறியாளர் சைவமாக இருக்க விரும்பினால்.. இந்திய உணவைச் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும் எனச் சொல்ல அதற்கு வான்ஸும் ஆமாம் அதுவே பெஸ்ட் எனக் குறிப்பிட்டார்,
வான்ஸ் மேலும் கூறுகையில், "நான் உஷாவை சந்திக்கும் முன்பே எனக்கு இந்திய உணவு குறித்து அடிப்படை புரிதல் மட்டுமே இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது சைவ உணவு உண்பவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால், அதை எல்லாம் மொத்தமாக மாற்றியவர் உஷா.. அனைவருக்கும் தெரியும் எனது மனைவி ஒரு இந்திய-அமெரிக்கர்.. அவர் சைவ உணவுகளை மிகவும் அருமையாகச் செய்வார்.
இந்திய உணவுகள் சுவையானது: நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சைவ உணவைச் சாப்பிட விரும்பினால் இந்திய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். அதில் அவ்வளவு ஆப்ஷன்கள் உள்ளன.. பன்னீர், அரிசி மற்றும் கொண்டைக்கடலையில் என்று பல ஆப்ஷன்கள் உள்ளன.. மோசமான இந்த போலி இறைச்சியைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது.. இந்திய உணவுகளில் பல வகைகள் இருப்பது மட்டுமின்றி அவை சூப்பர் சுவையானது" என்றார்.
தொடர்ந்து தனது மனைவியைச் சந்தித்த ஆரம்ப நாட்கள் குறித்துப் பேசிய அவர், "உஷாவுடன் டேட்டிங் செய்ய தொடங்கிய போது, நான் ஒரு முறை சைவ உணவைச் சமைத்த தர விரும்பினேன்.. ஆனால், அது சாப்பிடவே முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்தது. மாவைத் தட்டையாகச் செய்து அதில் ப்ரோக்கோலி உள்ளிட்ட காய்களை வைத்து 45 நிமிடங்கள் அவனில் வைத்து எடுத்தேன். அதுதான் என்னுடைய சைவ உணவு. சைவ பீட்சா என சொல்லலாம். ஆனால், அதன் டேஸ்ட் மிக மோசமாக இருந்தது.
சைவ உணவு: ஆனாலும், உஷாவுடன் பேசி பழகும் போது நான் பல சைவ உணவுகளை சாப்பிட்டேன். சைவ உணவுகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள எனக்குக் கொஞ்சக் காலம் ஆனது. ஆனால், அதைச் சாப்பிட்ட பிறகே அது எவ்வளவு சுவையானது, மாறுபட்டது என்பதை உணர்ந்தேன்" என்று அவர் தெரிவித்தார். இந்தாண்டு தொடக்கத்திலேயே தான் முழுமையாகச் சைவ உணவுக்கு மாறிவிட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications