சென்னையுடன் தொடர்பு.. அமெரிக்க துணை அதிபராகும் இந்திய மருமகன்! ஜேடி வான்ஸ் மனைவி ஊரில் கொண்டாட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் துணை அதிபராக டொனால்ட் டிரம்ப் கட்சியின் ஜேடி வான்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஜேடி வான்ஸ் யார் என்றால் இந்தியாவின் மருமகன் ஆவார். அதாவது அவரது மனைவி உஷா வான்ஸ் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில் தான் உஷா வான்ஸ்க்கு சொந்தமான கிராமத்தில் கொண்டாட்டம் களைகட்டி உள்ள நிலையில் உஷா வான்ஸின் குடும்பத்துக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் துணை அதிபராக டொனால்ட் டிரம்ப் கட்சியின் ஜேடி வான்ஸ் வாகை சூடியுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதேபோல் துணை அதிபராக ஜேடி வான்ஸ் செயல்பட உள்ளார். இவர்கள் 2 பேரும் 2028 ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருப்பார்கள். அதன்பிறகு மீண்டும் அதிபர் தேர்தல் என்பது நடக்கும்.
இத்தகைய சூழலில் தான் அமெரிக்க துணை அதிபராக செயல்பட போகும் ஜேடி வான்ஸ் இந்தியாவின் மருமகன் என்பது தெரியுமா? ஆம், அமெரிக்க துணை அதிபராகும் ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலிக்குரி இந்தியா வம்சாவளி ஆவார். அதோடு அவர் நம் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உஷா சிலிக்குரி ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.
மேலும் உஷாவின் தாத்தா ராமசாஸ்திரி சிலிகுரி சென்னையில் உள்ள ஐஐடியில் பணியாற்றினார். 1959ல் ஐஐடி தொடங்கியபோது அவர் பணி செய்தார். இதற்காக ஆந்திராவின் வட்லூருவை விட்டு அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்து தங்கி பணியாற்றினார். இந்த சமயத்தில் தான் 1970 காலக்கட்டத்தில் உஷாவின் பெற்றோர் சென்னையில் இருந்து அமெரிக்காவின் சான்டியாகோவிற்கு சென்றனர்.

உஷா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு சட்டப்படிப்பை படித்தவர். சட்டப்பள்ளியில் உஷா படித்தபோது ஜேடி வான்ஸ் அவருக்கு பழக்கமானார். இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இதன்மூலம் ஜேடி வான்ஸ் இந்தியாவின் மருமகன் ஆனார். ஜேடி வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகிய இருவருக்கும் தற்போது 38 வயது ஆகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோரிடம் கிளார்க் ஆக பணியாற்றியுள்ளார் உஷா வான்ஸ். திருமணமான புதிதில் கணவர் ஜேடி வான்ஸ் குடியரசு கட்சியில் பயணித்தார். ஆனால் உஷா தொடர்ந்து ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக பயணித்தார். அதன்பிறகு 2016க்கு பிறகு தான் உஷா தனது நிலைப்பாட்டை மாற்றி ஜனநாயக கட்சியில் இருந்து குடியரசு கட்சி உறுப்பினராக மாறினார். ஜேடி வான்ஸின் அரசியல் வளர்ச்சிக்கு உஷா தற்போது பக்கபலமாக உள்ளார். இத்தகைய சூழலில் தான் குடியரசு கட்சியின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் தங்கள் கிராமத்து மருமகன் ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ளதை ஆந்திராவின் வட்லூரு கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் ஜேடி வான்ஸ் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்த நிலையில் அவர் வாகை சூடியுள்ளதால் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
அதோடு துணை அதிபராகும் ஜேடி வான்ஸின் அரசியல் பின்னணியைபார்த்தால் அவர் தற்போது ஓஹியோவைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டராக உள்ளார். ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பையை கடுமையாக எதிர்த்தவர் என்பதோடு வெளிப்படையாக விமர்சித்தவர். சொந்த கட்சியை சேர்ந்தவர், அமெரிக்காவின் அதிபர் என்று பாராமல் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தவர் தான் இந்த ஜேடி வான்ஸ்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு தீமையை ஏற்படுத்தும் நபர், மோசமானவர். அமெரிக்காவின் ஹிட்லர் என வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தவர் தான் ஜேடி வான்ஸ். அதன்பிறகு டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராக மாறினார். தற்போது அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி மூலம் டொனால்ட் டிரம்ப்பே அறிவித்த நிலையில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். அவரது தாய் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹாரிசின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரமாகும். கமலா ஹாரிஸ் வெல்ல இங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்துள்ளார் என்பது இன்னொரு சோகமாகும். இருப்பினும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியாவின் ‛மகள்' கமலா ஹாரிஸ் தோற்றாலும், துணை அதிபர் தேர்லில் இந்தியாவின் மருமகன் ஜேடி வான்ஸ் வென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications