அமெரிக்கா போறீங்களா? விசா எடுக்கும் முன் "இதை" படிக்க மறக்க வேண்டாம்! சென்னை மக்களுக்கு முக்கியம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் சூழலில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மிக முக்கியமான ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் இந்த விவரங்களைச் சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய சிக்கலில் நாம் மாட்டிக்கொள்வோம்.
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், டிரம்ப் வந்த பிறகு விசா கெடுபிடிகள் அதிகரித்துவிட்டது அனைவருக்கும் தெரியும். இப்போது சுற்றுலா, பிஸ்னஸ் அல்லது குடும்பத்தினரைச் சந்திக்க என எதற்காக நீங்கள் அமெரிக்காவுக்குச் சென்றாலும் விசா வாங்குவது பெரிய போராட்டமாகிவிட்டது..

விசா நேர்காணல்
விமானத்தில் ஏறுவதற்கு முன்பே மிகப் பெரிய சவாலாக விசா நேர்காணல் அமைகிறது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை, தனது சர்வதேச அளவில் எந்த நகரங்களில் எவ்வளவு விசா காத்திருப்பு நேரம் உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அது இந்திய நகரங்களில் இப்போது விசாவுக்கு ஒருவர் எவ்வளவு காலம் காத்திருக்கிறார்கள் என்ற தெளிவான தகவல்களை வழங்குகிறது.
காத்திருப்பு நேரம்
அதேநேரம் இது "சராசரி காத்திருப்பு நேரம்" ("average wait time") தான். அதாவது விண்ணப்பக் கட்டணம் செலுத்திய தேதி முதல், நேர்காணலின் தேதி வரை, ஒரு விண்ணப்பதாரர் சராசரியாக எவ்வளவு நேரம் காத்திருக்கிறார் என்பதையே இது குறிக்கிறது. அதற்காக அடுத்து விண்ணப்பிப்போருக்கும் இதே அளவுக்குக் காத்திருப்பு நேரம் இருக்கும் என்றோ நிச்சயம் இந்தக் காலகட்டத்தில் விசா பிராசஸ் முடியும் என்றோ அர்த்தமில்லை. இது கடந்தகாலச் சராசரி விவரம் தானே தவிர எதிர்கால உத்தரவாதம் அல்ல. இருப்பினும், இது ஓரளவுக்கு நமக்குக் காத்திருப்பு நேரம் குறித்த ஐடியாவை வழங்குகிறது.
நேர்காணல் புக்கிங் என்பது எப்போதும் நிலையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரத்து செய்யப்படும் இடங்கள், ஊழியர்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களால் இது மாறிக் கொண்டே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தரவு ஒரு வரலாற்றுச் சராசரியைக் காட்டுகிறது!
எந்த நகரத்தில் எவ்வளவு?
அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த பிப்ரவரி 13ம் தேதி சராசரி காத்திருப்பு நேரம் குறித்த தகவல்களைப் பகிர்ந்தது. அதில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் B1/B2 (விசிட்டர்) விசா நேர்காணல்களுக்கான சராசரி காத்திருப்பு நேரத்தை நாம் பார்க்கலாம்:
- டெல்லி - 6.5 மாதங்கள்
- மும்பை - 9.5 மாதங்கள்
- சென்னை - 1.5 மாதங்கள்
- ஹைதராபாத் - 7.5 மாதங்கள்
- கொல்கத்தா - 2.5 மாதங்கள்
இந்த ஐந்து நகரங்களில், மும்பையில் தான் காத்திருப்பு நேரம் அதிகபட்சமாக உள்ளது. அங்குச் சராசரி காத்திருப்பு நேரம் 9.5 மாதங்களாக உள்ளது. மறுபுறம், சென்னையில் காத்திருப்பு நேரம் மிகக் குறைந்ததாக 1.5 மாதங்களாக உள்ளது.
உணர்த்துவது என்ன!
கடந்த ஆண்டில் விசா காத்திருப்பு நேரங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததையே இந்த ரிப்போர்ட் காட்டுகிறது. கொரோனா காலத்தில் ஏகப்பட்ட விசா நிலுவைகள் ஏற்பட்ட நிலையில், அதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. அப்போது ஏற்பட்ட தாமதங்களோடு ஒப்பிடுகையில் இப்போது நிலைமை முன்னேறி இருந்தாலும் கூட இன்னும் நிலைமை முழுமையாகச் சீராகவில்லை எனச் சொல்லலாம்.
எனவே, 2026ல் அமெரிக்கப் பயணத்திற்குத் திட்டமிடுபவர்கள், இந்தச் சராசரி கால அளவுகளை முன்கூட்டியே கணக்கில் கொள்வது நல்லது. நேர்காணல் மாறும் வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அது குறித்த விவரங்களைச் சரிபார்ப்பது நல்லது. நேர்காணல் சந்திப்பு உறுதியான பின்னரே தங்கள் பயணத் தேதிகளைத் திட்டமிட வேண்டும். அப்போது தான் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க முடியும்!
-
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
16 மாதமாச்சே.. மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன்! ஜி7 மாநாட்டில் சுவாரசியம் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications