வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு ஏற்படும் செலவு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு நொடிக்கு செலவிடும் தொகை முதல் ஒரு நாளைக்கு செலவிடும் தொகை வரையிலான முக்கிய அம்சங்கள் வெளியாகி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளது. இந்த போர் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கியது. இன்று 21வது நாளாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

இந்த போர் விரைவில் முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நினைத்தார். ஆனால் ஈரான் உக்கிரமாக பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் 3வது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு செலவாகும் தொகை பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் 6 நாளில் ரூ.1.02 லட்சம் கோடி
ஈரான் மீதான போருக்கு அமெரிக்கா வைத்துள்ள பெயர் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury). அமெரிக்காவின் பென்டகன் (போர் துறை) தகவலின்படி போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 179 கோடிக்கு மேல் செலவழித்துள்து. இதனை வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாரெட் உறுதி செய்துள்ளார். ஆனால் உண்மையிலேயே இந்த தொகை என்பது முதல் 6 நாளிலேயே செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ரகசிய கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் ஈரான் மீதான முதல் ஒரு வார போருக்கான அமெரிக்காவின் செலவு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 179 கோடியை விட அதிகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஏவுகணை + வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள்
இதில் முதல் 6 நாளிலேயே அமெரிக்கா, ஈரானில் 2,500 இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தி இருந்தது. இதில் ஏவுகணைகளுக்காக மட்டும் ரூ.51,089 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரானின் 2,500 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா பயன்படுத்திய 'தாட்' (THAAD) போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ரூ.52,947 கோடி (செலவிடப்பட்டுள்ளது.
ஒரு வினாடிக்கு எவ்வளவு?
இந்த போர் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கான செலவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் தரப்பில், ''ஈரான் மீதான போரால் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ரூ.9,289 கோடி முதல் ரூ.18,578 கோடி வரை செலவாகிறது. அதன்படி பார்த்தால் ஒவ்வொரு வினாடிக்கும் குறைந்தபட்சம் ரூ.10.68 லட்சம் முதல் ரூ.21.36 லட்சம் வரை மக்கள் பணம் செலவிடப்படுகிறது.
மொத்தம் எவ்வளவு செலவு வரும்
அமெரிக்கா முதல் 100 மணிநேர போருக்கு ரூ.34,369 கோடி மட்டுமே செலவாகும் என்று கணித்தது. ஆனால் முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.52,018 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12வது நாள் முடிவில் மொத்த செலவு ரூ.1,53,268 கோடியை எட்டியது. இதனால் அமெரிக்காவின் கணிப்பு பொய்யாகி போர் செலவு உச்சத்தை தொட்டுள்ளது.
தற்போது 3 வாரம் போருக்கு மொத்தமாக ரூ.5,57,340 கோடி முதல் ரூ.12,07,570 கோடி வரை செலவு ஏற்பட்டு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வாரம் போர் என்றால் ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 575 கோடி வரையும்,
8 வாரப் போர் என்றால் 23 லட்சத்து22 ஆயிரத்து 250 கோடிக்கும் மேலும் செலவிடப்பட வாய்ப்புள்ளது. ஈரான் மீதான போருக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தயார் நிலைகளுக்கு மட்டும் ரூ.5,852 கோடி செலவிடப்பட்டு இருந்தது'' என தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு காலம் போர் நடக்கும்?
இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''ஈரான் மீதான போர் 5 வார காலத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதிபரின் விருப்பப்படடி இது நீட்டிக்கப்படலாம். இல்லாவிட்டால் குறைக்கப்படலாம்'' என்று தெரிவித்தள்ளனர். ஈரான் மீதான போருக்கு அமெரிக்கா செலவிடும் இந்த தொகை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications