வீழ்த்தப்படும் உக்ரைன்? ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த வடகொரியா! போட்டோவை வெளியிட்ட அமெரிக்கா
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்யாவுக்கு, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏராளமான ஆயுதங்களை வழங்கி உள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அதோடு அதற்கான சேட்டிலைட் போட்டோக்களை அமெரிக்கா வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் நடவடிக்கை ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதுமட்டுமின்றி அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. போரில் ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதனால் அமெரிக்கா-ரஷ்யா இடையேயான மோதல் என்பது உச்சம் தொட்டுள்ளது.
அதேபோல் அமெரிக்காவுக்கு இன்னொரு எதிரி என்பது வடகொரியா. இதன் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அமெரிக்கா எச்சரிக்கையையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை வெற்றிக்கரமாக நிகழ்த்தி வடகொரியா சவால் விடுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றார். சில நாட்கள் அங்கு அவர் இருந்தார். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது? என்பது பற்றி ரஷ்யா, வடகொரியா தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த பயணத்தின்போது ரஷ்யா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூறின. அதோடு உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்யாவுக்கு, வடகொரியா ஆயுத சப்ளை செய்யலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அதாவது ரஷ்யாவுக்கு, வடகொரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான சேட்டிலைட் போட்டோக்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் வெடிமருந்து கிடங்கில் இருந்து ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பல் வழியாகவும், ரயில் மூலமாக ரஷ்யாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேட்டிலைட் படங்களை தான் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 7 ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதிக்குள் ராணுவ தளவாடங்கள், வெடிமருந்துகள் வடகொரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‛‛சில வாரங்களாக வடகொரியா 1000க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவுக்கு வழங்கி உள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது அந்த நாடுகள் இடையேயான ராணுவ உறவை அதிகரிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது பிற நாடுகளுக்கான பிரச்சனைக்குரிய விஷயமாகும்.
உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் அந்த நாட்டு மக்களை கொல்லவும், ரஷ்யாவின் சட்டவிரோத போரை தொடரவும் இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் வடகொரியாவின் இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் வடகொரியா சார்பில் ரஷ்யாவிடம் இருந்து தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை பெற அந்த நாடு முடிவு செய்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வழங்கினால் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் வடகொரியா-அமெரிக்கா உறவு என்பது பல ஆண்டுகளாக பிரச்சனைகளாக தான் உள்ளது. இதனால் அமெரிக்காவின் அறிவிப்பை பற்றி வடகொரியா கண்டுக்கொள்ளாமல் ரஷ்யாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications