தடுப்பூசி போட்டவுடன் பறிபோன கண் பார்வை.. உயிருக்கு போராடும் 23 வயது இளம்பெண்! உண்மையில் என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரது உடல்நிலை தடுப்பூசி போட்ட உடன் மிக மோசமாகப் பாதித்துள்ளது. கண்கள் வீங்கிய நிலையில், முகத்தின் நிறமே மாறி விகாரமாக மாறியுள்ளது. இதற்காக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லையாம். இது குறித்த தகவல்கள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஆரஞ்ச் என்ற ஒரு பகுதி இருக்கிறது. இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி போட்ட கொஞ்ச நாட்களிலேயே அந்த 23 வயதான பெண்ணுக்குக் கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு மாதம் Paroxysmal Nocturnal Hemoglobinuria (PNH) என்ற நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கப் பெண்: அந்த 23 வயது பெண் அலெக்சிஸ் லோரன்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அங்குள்ள மருத்துவ மையத்தில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் போட்டுள்ளார். அடுத்த 10வது நிமிடத்திலேயே அவரது உடல்நிலை மோசமுடைய தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தற்காலிக கண் பார்வை இழப்பு, வாயை அசைக்க முடியாமல் போனது, வாந்தி உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நம்மை ஊரைப் போல மருத்துவச் செலவு இருக்காது. பல மடங்கு அதிகமாகவே இருக்கும். அங்கு இன்சூரன்ஸ் இல்லாமல் மருத்துவமனைக்குள் சென்றால் பாதி சொத்தை எழுதிவிட்டு வந்துவிட வேண்டும் என்ற சூழலே இருக்கும். இந்த தடுப்பூசி போட்டுப் பாதிக்கப்பட்ட அலெக்சிஸ் லோரென்ஸுக்கு கலிபோர்னியாவில் மருத்துவ காப்பீடு இல்லை.
மிக மோசம்: இதனால் அவருக்கு அத்தனை பாதிப்புகள் இருந்த போதிலும் அவசர அவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படுகிறார். அதுவும் கூட எல்லாரும் சேர்ந்து கொஞ்ச கொஞ்ச பணத்தைத் திரட்டியே அலெக்சிஸ் லோரன்ஸ் சிகிச்சைக்கு உதவியுள்ளனர். 23 வயதான லெக்சிஸ் லோரென்ஸ் தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களை டிக்டாக் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவை பலவீனமான இதயம் கொண்டவர்கள் பார்க்கவே முடியாது. வீங்கிய கண்கள் மற்றும் நெற்றியில் உட்பட முகம் முழுக்க கருப்பு-ஊதா நிற சிராய்ப்புகள், வீக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
பல வித பாதிப்பு: தடுப்பூசி போட்ட கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு ரத்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ரத்த மாற்றுச் சிகிச்சையும் செய்யப்பட்டது. ரத்த மாற்றம் சற்று நிவாரணம் தந்தாலும் பாதிப்புகள் முழுமையாகச் சரியாகவில்லை. இருப்பினும், பூரண குணமடையத் தொடர் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
லெக்சிஸ் லோரென்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனச் சொல்லும் அவரது குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
அச்சம் வேண்டாம்: இந்த செய்தியைப் பார்த்து தடுப்பூசி எல்லாம் ஆபத்தானது என யாரும் எண்ணத் தேவையில்லை. நமது நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற பாதிப்புகள் என்பது அனைவருக்கும் ஏற்படாது. மிக மிக அரிதாகவே ஏற்படும். எனவே, இதை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை.
-
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
கடலில் கண்ணிவெடி வச்ச இடத்தை மறந்த ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பெரிய டேஞ்சர்.. போச்சு! -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
படிச்சு படிச்சு சொன்ன டிரம்ப்.. கேட்காத இஸ்ரேல்! லெபனானில் மீண்டும் தீவிர தாக்குதல்.. ஓயாத பதற்றம் -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு!












Click it and Unblock the Notifications