ரூ 25 லட்சம் மதிப்புள்ள உணவு மீது துப்பிய அமெரிக்க பெண்.. மன்னிப்பு கேட்டும் நடந்த பரிதாப சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு பல்பொருள் அங்காடியில் ரூ 25 லட்சம் மதிப்பிலான உணவுபொருளின் மீது இருமியதற்காக அவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அதை தடுக்க பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் முகக்கவசம் அணியுமாறும் தும்மும் போதும் இருமும் போதும் வெளியே நீர்த் துளிகள் தெளிக்காதவாறும் மக்கள் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது போல் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறி வருகிறார்கள். மேலும் சில நாடுகளில் 3ஆவது அலையும் 4ஆவது அலையும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கம்
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளையும் சில நாடுகள் விதித்துள்ளன. மாஸ்க் போடாவிட்டால் அபராதம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காவிட்டாலும் அபராதம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் கொரோனா வைரஸ் ஏமாற்று வேலை என அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
மற்றவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலும் இது போல் சிலர் அரசுக்கு எதிராக பேசி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் அதிர்ச்சியான செயல்களை செய்து வருகிறார்கள். கடந்த 18 மாதங்களாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் இறப்பு சம்பவங்களையும் பார்த்தும் கூட கோவிட் விதிகளை மீறி வருகிறார்கள்.

வீடியோக்கள் வைரலாகின்றன
இது போன்ற வீடியோக்கள் வைரலாகும் போது உலக நாடுகள் பல தண்டனைகளை விதித்துள்ளன. அதன்படி பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பெண் கோவிட் 19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க மறுத்ததால் அவருக்கு கடும் தண்டனையை அரசு விதித்துள்ளது. இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கோவிட் எதிர்ப்பாளர்களில் ஒருவராவார்.

நுழைந்த வேண்டுமென்றே
ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து வேண்டுமென்றே உணவின் மீது இருமியுள்ளார். மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெண் இருமிய உணவின் மதிப்பு ரூ 25 லட்சமாகும். அந்த பெண் மார்கரெட் ஆன் சிர்கோ ஆவார். அவர் உணவின் மீது இருமியது மட்டும் அல்லாமல் துப்பவும் செய்தார். தனக்கு கொரோனா இருப்பதால் இந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு வருபவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவுள்ளார்கள் என கூறி சிரித்தார்.

கொரோனா பரிசோதனை
இதையடுத்து அவரை அந்த கடையிலிருந்து வெளியேற்றிய பின்னர் போலீஸார் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் நடந்த போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் அதற்காக மன்னித்துவிடுமாறும் கூறியுள்ளார். எனினும் அவர் 2 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பவில்லை. 2 ஆண்டு முடிந்ததும் அவர் 8 ஆண்டுகளுக்கு பிரொபேஷன் காலத்தில் இருப்பார் என உத்தரவிடப்படுகிறது. விடுதலையானவுடன் சூப்பர் மார்கெட்டுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications