"எப்புட்றா.." காதலனுடன் நெருக்கம்! 17 வயதில் தொடங்கிய கர்ப்ப மாரத்தான்.. 12 வருடத்தில் 9 குழந்தைகள்
அமெரிக்காவில் மக்கள் தொகை சரிவு என்பது முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 39 வயதான கோரா டியூக், தனது 28 வயதிற்குள் ஒன்பது குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார். இது குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவரது உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படவே செய்கிறது. பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது இதுபோன்ற மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு முறை கர்ப்பமடைந்தாலும் கூட, பெண்கள் உடலில் இதுபோல பல மாற்றங்கள் ஏற்படுவதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனிடையே இணையத்தில் ஒரு சுவாரசிய வீடியோ இப்போது டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்கா
பெண்கள் கர்ப்பமடையும் வயது என்பது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இப்போது அதிகரித்தே உள்ளது. இப்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் 20களில் பிந்தைய நாட்களில் தான் கர்ப்பமடைகிறார்கள்.. அதிலும் அமெரிக்காவில் பெண்கள் கர்ப்பமடையும் சராசரி வயது இதைவிட அதிகம். 35 வயதுக்குப் பின்னரே அங்குப் பெண்கள் கர்ப்பம் தரிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கோரா டியூக் என்ற பெண் இந்த மரபுகளை உடைத்துவிட்டார் என்றே சொல்லலாம். இது குறித்த இவரது வீடியோ தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.

9 குழந்தைகள்
39 வயதான கோரா டியூக், தனது 28 வயதிற்குள் ஒன்பது குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட டிக்டாக் வீடியோ தான் இப்போது வரை வேகமாகப் பரவி வருகிறது. அவர் 12 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் கர்ப்பமாகவே இருந்துள்ளார், அவரது இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் 29 வயதில் 9 குழந்தைகளா என்று ஷாக் ஆகியும் வருகிறார்கள்.

17 வயதில் முதல் குழந்தை
நெவாடாவைச் சேர்ந்த கோரா டியூக் தனது 17 வயதில், அதாவது 2001இல் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பின்னர், அவர் அடுத்த 12 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவர் கர்ப்பமாகவே இருந்துள்ளார். 2012இல் அவர் தனது 9ஆவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.. இப்போது அவருக்கு 39 வயதாகும் நிலையில், தனது பெரிய குடும்பம் மற்றும் பாட்னர் ஆண்ட்ரேவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் கோரா டியூக்.

விபத்துகள்
இதில் விஷயம் என்னவென்றால், இவர்கள் இத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் திட்டமிடவில்லையாம். எல்லாம் விபத்துகளாம். இது குறித்து அவர் கூறுகையில், "உண்மையில் அப்படித்தான் நடந்தது. பெரும்பாலான எனது கர்ப்பங்கள் திட்டமிடப்பட்டது இல்லை.. நாங்கள் உரியப் பாதுகாப்பைப் பின்பற்றிய போதிலும், அது வேலை செய்யவில்லை.. இதுவே இத்தனை குழந்தைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்றார்.

அமெரிக்கா மக்கள் தொகை
அமெரிக்கக் குடும்பத்தில் சராசரியாக 1.94 குழந்தைகள் உள்ளனர். 1960களில் இது 2.5 ஆக இருந்தது. அதாவது அங்கு மக்கள் தொகை வளர்ச்சி என்பது குறைந்தே வருகிறது. வரும் காலத்தில் மக்கள் தொகை குறைவது என்பது அமெரிக்காவுக்கு முக்கிய பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஒன்பது குழந்தைகளைப் பெறத் திட்டமிடவில்லை என்று கூறும் டியூக், உயர்நிலைப் பள்ளியில் தனக்கு சீனியராக இருந்த போது தனது பாட்னரை சந்தித்துள்ளார்.

குழந்தைகள் மாரத்தான்
அப்போது அவர்கள் நெருக்கமாக இருக்கவே முதலில் கர்ப்பமடைந்துள்ளார். அப்போது ஆரம்பித்த குழந்தைகள் மாரத்தான் 12 ஆண்டுகள் தொடர்ந்துள்ளது. இந்த தம்பதிக்கு எலியா 21, ஷீனா 20, ஜான் 17, கெய்ரோ 16, சயா 14, அவி 13, ரோமானி 12, மற்றும் தாஜ் 10 என 8 குழந்தைகள் உள்ளனர். இது தொடர்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட டிக்டாக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. டியூக்கும் அவரது கணவரும் இப்போது லாஸ் வேகாஸ் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடன் தான் 8 குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூன்றாவது குழந்தையான யூமா, பிறந்த ஏழே நாட்களில் உயிரிழந்தது.

பிரச்சினை
இத்தனை குழந்தைகளை எப்படி வளர்த்தீர்கள் என்ற கேள்விக்கு அவர், "நிச்சயம் பிரச்சினை தான்.. எனது இளமைக் காலம் முழுக்க குழந்தை வளர்ப்பில் தான் போனது. ஆனால், டீன் ஏஜ் பருவத்தினரைக் கையாள்வதைக் காட்டிலும் குழந்தைகளைக் கையாள்வது எனக்கு ஈஸியாகவே இருந்தது" என்றார். டியூக் ஒன்பதாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, ஒரு ட்யூபல் லிகேஷன் எனப்படும் குழந்தை பிறப்பை நிரந்தரமாகத் தடுக்கும் ஆப்ரேஷனை செய்து கொண்டுள்ளார்.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications