மாத்திரை இங்கே இருக்கு.. அப்போ எதை விழுங்கினேன்.. அய்யயோ என பதறிய பெண்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஆல் சோதனை

Subscribe to Oneindia Tamil

வாசிங்டன் : வைட்டமின் மாத்திரையை விழுங்குவதற்கு பதிலாக பெண் ஒருவர் தான் கையில் வைத்திருந்த ஆப்பிள் ஏர்பாட்ஸை விழுங்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி கடந்த 12 ஆம் தேதி நடை பெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 மாடல் போன்களில் கொண்டு வரப்போகும் அப்டேட்கள் மற்றும் உள்ளிட்டவற்றை வெளியிட்டது. அதேபோல், ஆப்பிள் வாட்ச்சில் கொண்டு வரப்பட்டுள்ள அப்டேட்களையும் வெளியிட்டது. இதனால், கடந்த சில நாட்களாகவே ஆப்பிள் ஐபோன் நிறுவனம் குறித்த பேச்சுக்களே இணைய உலகை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

US woman swallows AirPods instead of vitamin pill

ஆப்பிளின் புதிய அப்டேட்டில் உள்ள சாதக பாதங்கள் குறித்தும்.. என்னவெல்லாம் அப்டேட்களை எதிர்பார்த்தோம் என்பது குறித்தும் நெட்டிசன்கள் பலரும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் ஆல் இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால், காரணம் தான் சற்று வினோதமானது.

அதாவது, காலையில் வாக்கிங் போகும் போது வைட்டமின் மாத்திரை என நினைத்து தனது கணவரின் ஏர்பாடை வாயில் போட்டு விழுங்கிவிட்டாராம். இது எப்படி நடந்தது என்பதை தனது டிக் டாக் பக்கத்தில் ரியால்டர் தன்னா பார்க்கர் கூறியிருக்கிறார். இது குறித்து தனது டிக் டாக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நான் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் எனது வைட்டமின் மாத்திரைகளை போட வேண்டிய நேரம் வந்தது.

எனவே, எனது வைட்டமின் மாத்திரைகளை எடுத்து விழுங்கினேன். பிறகு தண்ணீரையும் விழுங்கி விட்டு, சிறிது தூரம் சென்ற பிறகுதான் எனது மாத்திரைகள் கைகளிலேயே இருப்பதை பார்த்தேன். அப்போதுதான் வைட்டமின் மாத்திரைகளுக்கு பதிலாக ஆப்பிள் ஏர்பாடை விழுங்கியதை உணர்ந்தேன். நான் செய்ததை என்னாலாயே நம்ப முடியவில்லை. வீட்டிற்கு சென்றும் நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் தெரிவித்தேன்.

எனது கணவரோ இதை யாரிடம் வெளியில் போய் சொல்லிவிட வேண்டாம் என்று என்னை அறிவுறுத்தினார்" என்றார். நெட்டிசன்கள் பலரும் இவரது பதிவுக்கு ஜாலியாக தங்களுக்கே உரிய பாணியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், உங்கள் ஏர்பாட் மீண்டும் கைக்கும் கிடைக்கும் போது... அய்யோ நினைக்கவே முடியவில்லை என ஒரு நெட்டிசன் பதிவிட்டு இருக்கிறார்.

அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "ஏர்பாட்ஸில் உள்ள காந்தத்தால் உங்கள் வயிறுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என ஒரு நெட்டிசன் அட்வைஸ் செய்துள்ளார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் தனது டிக்டாக்கில் பதிவிட்ட ரியால்டர் தன்னா பார்க்கர், தனது உடல் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இயற்கையான முறையிலேயே ஏர்பாட் வெளியே வந்துவிட்டதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+