இனிமே உடலுறவு கிடையாது! '4பி'யில் சேரும் அமெரிக்க பெண்கள்! டிரம்ப் வெற்றியால் தவிக்கும் கணவன்மார்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவரது வெற்றியை விரும்பாத சில அமெரிக்க பெண்கள், ஆண்களை அடுத்த 4 ஆண்டுகளுக்கு கிட்ட சேர்க்க போவது இல்லை என்று கூறி தென் கொரியாவில் பிரபலமாக உள்ள 4 பி இயக்கத்தில் இணைய இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். மணமான பெண்களும் இப்படி கூறி வருகிறார்களாம்... அது என்ன 4 பி இயக்கம் என்பது பற்றியும் அமெரிக்க பெண்களின் இந்த முடிவு தொடர்பாகவும் விவரமாக பார்ப்போம்.
அமெரிக்காவில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு தேவையான 270 எலக்ட்ரோல் வாக்குகளையும் தாண்டி டிரம்ப் பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 226 எலக்ட்ரல் வாக்குளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தாலும் இன்னமும் அங்கு தேர்தல் பரபரப்பு முடிந்த பாடில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதை குடியரசுக் கட்சி ஆதராவளர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்க, தோல்வி அடைந்தது தொடர்பாக ஜனநாயக கட்சியினர் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கணவர்களுடன் உடலுறவு கிடையாது: மழை விட்டாலும் தூவானம் விடுவது இல்லை என்று சொல்வது போல.. தேர்தல் முடிந்தாலும் இன்னமும் தேர்தல் தொடர்பான செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி அடைந்து இருக்கும் நிலையில், அவரது வெற்றிக்கு ஆண்கள் பலரும் வாக்களித்து இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்த பெண்கள் சிலர், இனி கணவன்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம்.. குழந்தைகளும் பெற்றுக்கொள்ள மாட்டோமென்று கூறி 4 பி இயக்கத்தில் சேரப்போவதாக கூறியிருக்கிறார்கள்.
4 பி இயக்கம் என்றால் என்ன?: அமெரிக்காவில் பிரபலமாக உள்ள டிக் டாக் சமூக வலைத்தளத்தில் இது 4 பி இயக்கம் தொடர்பான தேடல்களும், பதிவுகளும் அதிகரித்து இருக்கின்றன. 4 பி இயக்கம் என்பது தென்கொரியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்த ஒன்றாகும். உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தை ஆகிய 4 விஷயங்களுக்கும் நோ சொல்லும் இயக்கமாக இந்த 4B movement தென் கொரியாவில் அறியப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்: டிரம்ப் வெற்றியால் அதிருப்தி அடைந்து இருக்கும் பெண்கள் இந்த 4 பி இயக்கத்தில் இணைந்து ஆண்களை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக அமெரிக்க பெண் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவின் பிறப்பு விகிதத்தை குறைக்கவேண்டும். தென் கொரிய பெண்களை போல நாமும் 4 பி பற்றி யோசிக்க வேண்டும். கடைசியாக ஆண்களை சிரிக்கவும் அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
மீ டூ போல: இவரது பதிவு அமெரிக்காவில் சமூக வலைத்தளத்தில் வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு, வன்முறைகள் ஆகியவற்றிற்கு எதிராக தென்கொரியாவில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு 4 பி இயக்கம் பிரபலம் அடைந்தது. மீ டூ இயக்கத்தை தொடர்ந்து இந்த 4 பி இயக்கமும் தென்கொரியாவில் பிரபலம் அடைந்து இருந்தது.
நெட்டிசன்கள் நையாண்டி: தற்போது அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு பிறகு பாலியல் ஸ்டிரைக் போல தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக இந்த 4 பி இயக்கத்தில் சேரப்போவதாக இளம்பெண்கள் அறிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வருகின்றன. எது எப்படியோ அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களின் பாடு கொஞ்ச காலத்திற்கு திண்டாட்டம் தான் போல என நெட்டிசன்கள் நையாண்டியாக பதிவிட்டு வருகிறார்கள்.
-
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications