"ஆண்களுக்கு விஷம்.." டிரம்ப் வெற்றிக்கு பழிவாங்க போவதாக இறங்கும் பெண்கள்! அச்சத்தில் இளைஞர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை எதிர்த்துப் பல பெண்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு சில பெண்கள், டிரம்ப் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஆண்களை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்ற வினோதமான ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அதிக ஆண்கள் டிரம்புக்கு வாக்களித்ததாகவும் அதுவே டிரம்ப் வெற்றிக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இதையடுத்து டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அங்கு வினோத போராட்டங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஆண்களுடன் உடலுறவே கொள்ள மாட்டோம் என்று பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வினோதம்: இதற்கிடையே அமெரிக்காவில் வேறு சில பெண்கள் வினோதமான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் MATGA- அதாவது Make Aqua Tofana Great Again என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இது கருக்கலைப்பு குறித்த அச்சம் காரணமாக ஆண்களைக் கொலை செய்வது ஆதரிக்கும் ஒரு இயக்கமாகும். இப்போது அங்குள்ள பெண்கள் சிலர் இந்த இயக்கம் குறித்துப் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
என்ன காரணம்: அமெரிக்காவில் பெண்களிடையே பெரிய பிரச்சினையாக இருந்தது கருக்கலைப்பு விவகாரம் தான். கடந்த 2022ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது பெடரல், அதாவது நாடு தழுவிய அளவிலான உரிமை இல்லை என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு வந்த உடனேயே பல மாகாணங்களில், குறிப்பாகக் குடியரசு கட்சியில் ஆட்சியில் உள்ள மாகாணங்களில் கருக்கலைப்பிற்கு மொத்தமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்களின் உரிமை மறுக்கப்படுவதாகவே இந்த தடையை அங்குள்ள பெண்கள் கருதினர். அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்படும் என்றே ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். டிரம்ப் இந்த விவகாரத்தில் நேரடியாகப் பதில் சொல்லாமல் தொடர்ந்து மழுப்பியே வந்தார். இந்தச் சூழலில் அவர் வென்றுள்ள நிலையில், நாடு முழுக்க கருக்கலைப்பிற்குத் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் அங்குள்ள பெண்களிடையே அதிகரித்துள்ளது.
கொலை: இதன் காரணமாகவே பெண்கள் பலரும் இதுபோன்ற வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஆண்களை எப்படி எல்லாம் கொலை செய்யலாம் என்பது குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். ஒரு கோப்பை தேநீர் அல்லது பானத்தில் விஷத்தைச் சேர்க்கலாம் என்று பெண்கள் கூறி வருகிறார்கள். டிரம்ப் MAGA (Make America Great Again) என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே MATGA அதாவது Make Aqua Tofana Great Again என்ற இந்த பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.
பின்னணி: சரி அதென்ன டோஃபானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கடந்த 17ம் நூற்றாண்டில் கியுலியா டோஃபானா என்ற பெண் வாழ்ந்து வந்தார். அவர் அடித்துத் துன்புறுத்தும் கணவர்களைக் கொலை செய்யப் பல பெண்களுக்கு பாய்சனை கொடுத்துள்ளார். இதனால் சுமார் 600 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். அவர் அளித்த பாய்சனின் பெயர் தான் Aqua Tofana என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாய்சன் சுவையற்றதாகும். மேலும், அப்போது இருந்த தொழில்நுட்பத்தை வைத்து உயிரிழந்தவர் பாய்சன் வைத்துத் தான் கொல்லப்பட்டார் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. பொதுவாக இந்த பாய்சனை அழகுசாதனப் பாட்டில்களில் சேமித்து வைப்பார்களாம். அப்போது தான் கணவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அந்த காலத்தில் விவாகரத்து என்ற ஆப்ஷன் இல்லாததால் பல பெண்கள் மோசமான திருமணங்களிலிருந்து தப்பிக்க இந்த முறையைத் தேர்ந்தெடுத்தனர். இப்போது டிரம்ப் வென்றுள்ள நிலையில், மீண்டும் இது இணையத்தில் டிரெண்டாக தொடங்கியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications