சீனாவை எங்களால் அழிக்க முடியும்.. பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்.. இரு வல்லரசுகள் இடையே முற்றும் மோதல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது. இந்நிலையில் தான் ‛‛நாங்கள் நினைத்தால் சீனாவை சிதைக்க முடியும். எங்களிடம் அதற்கான கார்டு உள்ளது. அமெரிக்காவுக்கான அரிய கனிமங்களான ‛மேக்னட்' ஏற்றுமதியை நிறுத்தினால் சீனாவுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானது முதல் அனைத்து நாடுகளுக்கும் வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி கடந்த 7 ம் தேதி அமலான நிலையில் அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி நாளை முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

அதேபோல் சீனாவுக்கு, டிரம்ப் 145 சதவீத வரிகளை விதித்தார். இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவுக்கு 135 சதவீத வரியை விதித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும் அரிய வகை கனிமங்களை சீனா குறைத்தது. இதனால் வேறு வழியின்றி டிரம்ப் அடங்கிப்போனார்.
சீனா - அமெரிக்கா மோதல்
சீனாவுக்கு 30 சதவீத வரியை மட்டும் அமல்படுத்தி டிரம்ப் மற்ற வரிகளை நிறுத்தி வைத்தார். சீனாவும், அமெரிக்காவுக்கான வரியை நிறுத்தி வைத்தது. இருப்பினும் இருநாடுகள் இடையேயான பிரச்சனை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருநாடுகள் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
சீனாவை மிரட்டும் டிரம்ப்
இதற்கிடையே தான் நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது. இருநாடுகள் இடையே எல்லை விஷயத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் கூட அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாடும், சீனாவும் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. இதனை டிரம்பால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இப்படியான சூழலில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவை பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.
சீனாவே சிதைந்து விடும்
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛நாங்கள் சீனாவுடன் நல்ல உறவு வைத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் சீனாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் சில கார்டுகள் உள்ளன. அதை விட எங்களிடம் சிறப்பான கார்டுகள் உள்ளன. ஆனால் அந்த கார்டுகளை நான் இப்போது பயன்படுத்த விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை இறக்கினால் சீனா சிதைந்து விடும்.
மேக்னட் தராவிட்டால் 200 சதவீத வரி
சீனா எங்களுக்கு மேக்னட்டுகள் (Magnets) வழங்கி வருகிறது. அரியவகை கனிமங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 200 சதவீத வரி விதிக்க வேண்டும். மேக்னட்டை எங்களுக்கு தரவில்லை என்றால் அவர்களுக்கு 200 சதவீத வரி அல்லது வேறு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று நான் நினைக்கிறேன்'' என மிரட்டி உள்ளார்.
சீன மேக்னட் ஏன் முக்கியம்?
அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து அதிகப்படியான அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கனிமங்கள், அமெரிக்காவின் பாதுகாப்பு துறைகளுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளன. அமெரிக்காவின் பல தளவாடங்கள் சீனாவின் அரிய வகை கனிமங்களை வைத்து தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அமெரிக்காவுக்கு, சீனாவின் கனிமங்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த மேக்னட் உள்பட கனிம வளங்களை நிறுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் சமயத்தில் டிரம்ப் இப்படி மிரட்டல் விடுத்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications