அமெரிக்கா - கனடா இடையே வரி யுத்தம்.. டிரம்புக்கு பதிலடி கொடுக்காம விட மாட்டேன்! மார்க் கார்னி அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கனடா நாட்டு இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கனடா பிரதமரும் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகளான உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறையில் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக திகழ்ந்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையே 8 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

கனடாவுக்கு வரி விதித்த டிரம்ப்
நெருக்கமான நட்பு நாடாக அமெரிக்காவும் கனடாவும் இருந்து வந்த நிலையில் சமீப காலமாக இருநாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்துள்ளது. டிரம்ப் தனது 2-வது ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் நலனே முக்கியம் எனக்கூறி பல நாடுகள் மீது வரியை விதித்தார். டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடியாக சீனா மற்றும் கனடா வரி விதித்தன. இதனால் டிரம்ப் கடும் கோபம் அடைந்தார். சீனாவுக்கும் கனடாவுக்கும் வரி விதித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்த வரி விதிப்பு கடந்த மாதமே அமலுக்கு வர இருந்த நிலையில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வரி விவகாரம் தொடர்பாக பேச்சுவர்த்தை நடைபெற்றது. இதனால் வரி விதிப்பை டிரம்ப் ஒத்திவைத்தார். ஆனால் இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தக பேச்சுவர்த்தை தோல்வி அடைந்தது.
கனடாவும் அமெரிக்காவுக்கு பதிலடி
இதனால், அப்செட் ஆன டிரம்ப், கனடா மீது 50 சதவீத வரியை விதித்தார். நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்கா விதிப்பதாக கூறிய கனடா பேச்சுவார்த்தையை நிறுத்திகொண்டு சொந்த நாடு திரும்பியது. மேலும் அமெரிக்காவுக்கு பதிலடியாக அந்த நாட்டின் பொருட்கள் மீது பரஸ்பரம் 50 சதவீதம் வரி விதித்து மார்க் கார்னி உத்தரவிட்டார். செப்டம்பர் 8 முதல் இந்த பதிலடி வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று கனடா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
