கையை விட்டு போகும் மாலத்தீவு? இந்தியாவுக்கு பெரிய அடி.. உற்று பார்க்கும் அமெரிக்கா! என்ன நடக்கிறது
வாஷிங்டன்: மாலத்தீவில் இருக்கும் இந்தியா ராணுவத்தை வெளியேற்றுவதில் அந்நாட்டு புதிய அதிபர் ப்ராஹிம் முகமது சோலிஹ் தீவிரமாக இருக்கும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டி தீவு நாடா மாலத்தீவு.. சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக ஹனி மூன் செல்வோருக்கு இந்த மாலத்தீவு சொர்க்க பூமியாக இருக்கிறது. தீவுகளின் கூட்டமான மாலத்தீவின் மொத்த மக்கள்தொகையே 5.21 லட்சம் தான்.

குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு முக்கிய நாடாக மாலத்தீவு இருக்கிறது. இதன் காரணமாகவே ராணுவம் தொடங்கி பல்வேறு துறைகளில் மாலத்தீவுக்கு இந்தியா உதவிகளைச் செய்துள்ளது.
மாலத்தீவு தேர்தல்: ஒரு பக்கம் இந்தியா என்றால் மற்றொரு பக்கம் சீனாவும் அங்கே தனது இருப்பை அதிகரிக்க முயல்கிறது. இந்தச் சூழலில் அங்கே சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ப்ராஹிம் முகமதை வீழ்த்தி மாலத்தீவு ஜனநாயக கட்சியின் ப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றார். இதன் மூலம் அதிபராகத் தேர்வாகியுள்ள ப்ராஹிம் முகமது சோலிஹ் பொதுவாக இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுப்பவராகக் கருதப்படுகிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போதே ப்ராஹிம் முகமது சோலிஹ், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் எனக் கூறியிருந்தார். இப்போது தேர்தலில் அவர் வென்றுள்ள நிலையில், விரைவில் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது இதில் மாலத்தீவு புதிய அதிபர் முகமது முய்சு இந்திய ராணுவத்தை அவர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் இருப்பினும், இதில் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நிலைப்பாடு: இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "இது மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விவகாரம். எந்தவொரு நாடும் அதன் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நாங்கள் எந்தவொரு நாட்டிடமும் சென்று என்ன செய்ய வேண்டும் எனக் கூறியதே கிடையாது. ஒரு நாடு சீனா, இந்தியா, அவ்வளவு ஏன் அமெரிக்கா உடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்பதைக் கூட நாங்கள் வலியுறுத்த மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்,
மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே கடந்த 5 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. இவர் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார். இவரது காலத்திலேயே பொருளாதாரம் மற்றும் ராணுவத் துறைகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அதிபர் தேர்தலில் இவர் தோல்வியடைந்த நிலையில், சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகக் கருதப்படும் முகமது முய்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியா கனடா விவகாரம்: இது ஒரு பக்கம் இருக்க இந்தியா கனடா விவகாரமும் அமெரிக்காவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து வேதாந்த் படேல் கூறுகையில், "இந்தியா கனடா உறவு மோசமடைந்து வருவது இந்தோ பசிபிக் மீதான அமெரிக்காவின் கவனத்தைப் பாதிக்காது.. ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. கனடாவின் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.. நாங்கள் தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வெளியிலும் சரி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.

தூதர்கள் விவகாரம்: கனடாவின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி தரும் வகையில், இந்தியாவில் இருக்கும் 41 கனடா தூதர்களை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டது. இது குறித்த கேள்விக்கு அவர், "நாங்கள் குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இருப்பினும், இந்திய அரசு நிஜ்ஜர் கொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றும் கனடா பயங்கரவாதிகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேநேரம் இது இந்தோ பசிபிக் மீதான அமெரிக்காவின் கவனத்தைப் பாதிக்காது.. இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். அங்கே பல பிரச்சினைகள் இருக்கிறது. அதைச் சரி செய்ய இணைந்து பணியாற்றுவோம். அதேநேரம் பயங்கரவாதி கொலையும் முக்கியமான விவகார. இதில் கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications