Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாகி வருவதாக அமெரிக்காவின் USCIRF என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரிக்கும் மத மோதல்கள் கவலை தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

1998ல் அமெரிக்க நாடாளுமன்றம் மூலம் USCIRF உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் மத சுதந்திரத்தைக் கண்காணித்து அமெரிக்க அதிபர், வெளியுறவுச் செயலர், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை USCIRF சமர்ப்பித்துள்ளது.

USCIRF Recommends US to ban RSS and R amp amp AW also to Designates India Country of Particular Concern

ஆர்எஸ்எஸ் தடை

USCIRF எனப்படும் இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என USCIRF தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா அமைப்பு மீதும் தடை விதிக்க வேண்டும் என USCIRF பரிந்துரைத்துள்ளது. மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறியதற்காக அந்த அமைப்பின் மீதும் தடை விதிக்க வேண்டும் என USCIRF கூறியுள்ளது.

இந்தியாவை "குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு" எனப் பட்டியலிட்டுள்ள USCIRF, ஆயுத விற்பனை மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மத சுதந்திரத்துடன் இணைக்க அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. தன் வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திர நிலை 'தொடர்ந்து மோசமடைந்து வருகிறது' எனக் கூறிய USCIRF, இந்தியாவில் மத சிறுபான்மையினர், வழிபாட்டுத் தலங்கள் இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியது.

மத மாற்றத் தடை

அந்த ரிப்போர்ட்டில் மேலும், "மத மாற்றத்தைத் தடை செய்யும் வகையில் பல மாநிலங்கள் கடுமையான சிறைத் தண்டனைகளைக் கொண்டு வந்துள்ளன. குடிமக்களையும் மத அகதிகளையும் கைது செய்வதற்கும் சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கும் வழிவகுத்தனர். மேலும், மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கும்பல் தாக்குதல்களைத் தொடர்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வக்ஃபு திருத்தச் சட்டம் மற்றும் உத்தரகாண்ட் சிறுபான்மை கல்வி ஆணைய சட்டம் ஆகியவற்றை USCIRF விமர்சித்தது.

இந்தியாவுக்கு பிரஷர் போடணும்

மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநில வகுப்புவாத மோதல்களை USCIRF குறிப்பிட்டது. ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் வன்முறைக்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டியது. மத சுதந்திரப் பிரச்சனைகளில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்க அரசுக்கு USCIRF பரிந்துரைத்தது. அதில் மேலும், "அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ரிப்போர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிச்சயம் செயல்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. எனவே, தற்போதைய சூழலில் ஆர்எஸ்எஸ் மற்றும் ரா அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புகள் ரொம்பவே குறைவு!

முதல்முறை இல்லை

USCIRF அமைப்பு இந்தியா குறித்து இதுபோல ரிப்போர்ட்டை சமர்ப்பிப்பது முதல்முறை இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் மச சுதந்திரம் மோசமடைந்து வருவதாக இந்த அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டிற்கு இந்தியா இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. இருப்பினும், கடந்தாண்டு ரிப்போர்ட்டை இந்தியா நிராகரித்திருந்தது. அது பக்கச்சார்பானவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என குறிப்பிட்டது. ஜனநாயகத்தின் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருக்கிறது என்றும் இந்தியாவின் நிலையை அச்சுறுத்தும் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+