ஜஸ்ட் மிஸ்! பறந்து வந்த ஹெலிகாப்டர்.. மக்கள் இருந்த இடத்திற்கு மிக அருகே கடற்கரையில் விபத்து! வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் மியாமி கடற்கரையில் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கே அமைந்துள்ள மாகாணங்களில் ஒன்று புளோரிடா. இங்கு மழைக் காலத்தைத் தவிர பெரும்பாலான நாட்கள் வெப்பமான வானிலையே நிலவும்.

இதனால் வெப்பத்தில் இருந்து எஸ்கேப் ஆக பெரும்பாலான மக்கள் விடுமுறை நாட்களில் கடற்கரைக்குப் படையெடுப்பது வழக்கம்.

 ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து

புளோரிடாவின் மியாமி நகரில் மியாமி கடற்கரை பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் வெப்பத்தில் இருந்து எஸ்கேப் ஆக அங்கு மக்கள் கூடுவது வழக்கம். அதன்படி நேற்றைய தினம் மியாமி கடற்கரையில் அதிகளவிலான மக்கள் குவிந்து இருந்தனர். அங்குக் கடற்கரையில் விளையாடிக் கொண்டும், சன் பாத் எடுத்துக் கொண்டும் பொதுமக்கள் ரிலாக்ஸ் செய்து வந்தனர். அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹெலிகாப்டர் ஒன்று கடற்கரை அருகிலேயே கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

 சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ராபின்சன் R44 என்ற அந்த ஹெலிகாப்டர் மதியம் 1 மணியளவில் கடற்கரை அருகே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

ராபின்சன் R44 மியாமி கடற்கரைக்கு மேலே பறந்து சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் அப்படியே கடற்கரை அருகிலேயே கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் அந்த ஹெலிகாப்டர் அப்படியே மூழ்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் சிக்கிய 3 பேரை மீட்டனர். இதில் விமானிக்குப் பெரியளவில் அடி ஏற்படவில்லை. ஆனால், பயணிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 மியாமி போலீஸ்

மியாமி போலீஸ்


இது தொடர்பாக மியாமி போலீஸ் தரப்பில் கூறுகையில், "விபத்தில் சிக்கிய 3 பேரும் தற்போது சீராக உள்ளனர். விமானத்தின் இன்ஜின் திடீரென செயலிழந்துள்ளது. இருப்பினும், விமானி நன்கு பயிற்சி பெற்றவராக இருந்ததால் அவர் மோசமான விபத்து ஏற்படுவதைத் தவிர்த்துள்ளார். மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் அவர் விமானத்தை இறக்கியதன் மூலம் கடற்கரையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 பெரிய விபத்து தவிர்ப்பு

பெரிய விபத்து தவிர்ப்பு

இந்த விபத்து இன்னும் சில மீட்டர்கள் கடற்கரையை ஒட்டி நடந்து இருந்தால், பெரியளவு விபத்துகள் ஏற்பட்டிருக்கும். விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே அத்தனை பேர் இருந்தனர். விமானி சிறப்பாகச் செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். இதனால் மியாமி கடற்கரையில் விபத்து ஏற்பட்ட பகுதி மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+