அமெரிக்க விமானத்துடன் ராணுவ ஹெலிகாப்டர் மோதல்.. ஆற்றில் அலறிய உயிர்கள்.. கலங்க வைத்த கடைசி நொடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதன் ரேடார் காட்சி அங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் திரையிடப்பட்டுள்ளது.இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மொத்தம் 49 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியில், மூன்று பேருடன் சென்ற ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும், 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற PAT25 என்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானமும் எப்படி மோதின என்பதை காட்டுகின்றன.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் விசிட்டாவில் இருந்து PAT25 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் வாஷிங்டன் நோக்கி புறப்பட்டது. விமானம் வாஷிங்டன் நகரில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். அப்போது போடமேக் ஆற்றின் மீது பறந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியும், விமானிக்கு வழங்கப்பட்டதால், விமானத்தை தரையிறக்குவதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அப்போது வெர்ஜினியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சிக்கோர்ஸ்கி எச்.60 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் அதே வான் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டருடன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.

america flight us

இதனால் விமானமும், ஹெலிகாப்டரும் தீப்பிடித்தபடி போடோமேக் ஆற்றில் விழுந்துவிட்டன. வி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக அங்கு மீட்பு பணி நடந்தது. ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்தவர்கள் நிலைபற்றி உடனடியாக தெரியவில்லை. தண்ணீருக்குள் தேடும்பணியை மீட்பு படையினர் மேற்கொண்டனர். நூற்றுக் கணக்கான மருத்துவக் குழுக்களும் அங்கு விரைந்து வந்தன. ஆற்றில் மூழ்கிய மொத்தம் 67 பேரில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்களும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறிய அதிகாரிகள், அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.

america flight us

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. இந்த விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறினார். இதனிடையே விபத்துக்குள்ளான பயணிகள் ஜெட் விமானம் ரீகன் விமான நிலையத்துக்கு அருகே 400 மீட்டர் உயரத்தில், மணிக்கு 140 மைல் வேகத்தில் பறந்து வந்ததாக, அதில் இருந்து வந்த கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது அதன் கருப்புப் பெட்டி கிடைத்த பிறகே தெரியவர வாய்ப்புள்ளது. அமெரிக்க ஏர்லையன்ஸ் விமானத்தில் ரஷ்ய சாம்பியன்களான எவ்ஜீனியா ஷிஷ்கோவா மற்றும் வாடிம் நௌமோவ் உள்ளிட்ட பல்வேறு ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

america flight us

ஏர்லைன் விமானத்தை இயக்கிய விமானி அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஆறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட 28 வயதான சாம் லில்லி என தெரியவந்துள்ளது. அவருக்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பயணிகள் விமானமும், அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய போது நடந்த ஆடியோ உரையாடல்களை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் ஆடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 8:47 மணிக்கு பதிவான ஆடியோவின் படி, "PAT25 (பயணிகள் விமானம்), ராணுவ விமானத்திற்கு பின்னால் செல்லுங்கள்," என் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார். சில வினாடிகள் கழித்து, மற்றொரு விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை அழைத்து, விபத்து நடக்க போவதை குறிக்கும் வகையில் " நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" என்று கேட்கிறார். பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் ஓடுபாதை 33 க்குச் செல்லும் விமானங்களைச் சுற்றிச் செல்ல திருப்பிவிடுகிறார். இறுதியாக "விபத்து, விபத்து, விபத்து,," என்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவர் விபத்து நடந்த நேரத்தில் இருந்து ஆடியோவில் கூறுவதாக உள்ளது. "என்ன நடந்தது என்பதை நீங்கள் முன்கூட்டியே புரிந்துகொண்டீர்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஓடுபாதை 33 க்குள் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது காலவரையின்றி நடவடிக்கைகளை நிறுத்தப் போகிறோம்," என்று மற்றொரு கட்டுப்பாட்டாளர் கூறுவதாக ஆடியோ உள்ளது.

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம், அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதன் ரேடார் காட்சி அங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் திரையிடப்பட்டுள்ளது.இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மொத்தம் 49 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியில், மூன்று பேருடன் சென்ற ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும், 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற PAT25 என்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானமும் எப்படி மோதின என்பதை காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+