"விவேக் ராமசாமியா.. அவர் வேற லெவல் தான்.." தமிழரை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! ஆனா கடைசியில் ஒரு நக்கல்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை திடீரென டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் தான் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.. இருப்பினும், இப்போதே அங்குத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பித்துள்ளது. அங்கு ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் பிரதானமாக இருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

அதேநேரம் மறுபுறம் குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
தேர்தல்: இதற்கிடையே குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். இந்திய- அமெரிக்கரான விவேக் ராமசாமியை மிகவும் நல்லவர் என்று குறிப்பிடும் டிரம்ப், அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் மற்றும் விவேக் ராமசாமி இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் பாராட்டு: இது குறித்து டிவி நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், "விவேக் ராமசாமி உன்மையாகவே ஒரு புத்திசாலி தான். அவர் ஸ்மார்ட்டான இளைஞன்.. அவருக்குப் பல திறமைகள் இருக்கிறது. அவர் நிச்சயமாக ஏதோ ஒரு வடிவத்தில் உதவியாக இருப்பார். அவர் உண்மையிலேயே தனித்துவம் பெற்றவர் என்பதால் நிச்சயம் அவர் ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவியாக இருப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
குடியரசுக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். அதேநேரம் அங்கே பல கருத்துக் கணிப்புகளில் விவேக் ராமசாமி கடும் போட்டியையே கொடுத்து வருகிறார். இந்த விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும், அவரது பெற்றோர் இந்தியாவில் பிறந்தவர்கள். அவர்கள் கேரளாவில் வசித்த தமிழ் பேசும் பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த அதிபர்: டிரம்ப் மேலும் கூறுகையில், "இந்த நூற்றாண்டில் நான் தான் சிறந்த அதிபர் என்று சொல்கிறார்கள்.. என்னுடன் இதுபோன்ற ஒரு நபர் வேண்டும் என்று விரும்புகிறேன்.. சமீபத்தில் நடந்த குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருக்கான விவாதத்தில் விவேக் ராமசாமி மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார். அவர் மிகச் சிறந்த ஒரு துணை அதிபராக இருப்பார்" என்று தெரிவித்தார். விவேக் ராமசாமியை புகழ்ந்த டிரம்ப், கடைசியில் அவர் நல்ல துணை அதிபராக இருப்பார் எனக் கூறியதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் முறை ஆட்சி தான் நடக்கும். அங்குக் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அதன்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப், விவேக் ராமசாமி எனப் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் இருந்து யாராவது ஒருவர் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார். அந்த அதிபர் வேட்பாளர் பிறகுத் தனது துணை அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வார். அவர்கள் இணைந்தே அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாதம்: முன்னதாக கடந்த வாரம் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோர் மத்தியில் விவாதம் நடைபெற்றது. அதில் டிரம்ப் கலந்து கொள்ளாத நிலையில், விவேக் ராமசாமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதில் பேசிய விவேக் ராமசாமி, டிரம்பை 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அதிபர் என்று குறிப்பிட்டார். இது குறித்து முன்னதாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த விவாதத்தில் விவேக் ராமசாமிக்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அங்கு அவர் சொன்ன உண்மையே அவருக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது" என்றார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications