ஜொலிக்க போகுது வானம்.. "பிளாக் மூன்.." இன்னைக்கு நைட் மிஸ் பண்ணாம வானத்தை பாருங்க! அதிசய நிகழ்வு
வாஷிங்டன்: இன்றைய தினம் வானில் அரிய பிளாக் மூன் நிகழ்வு நிகழ இருக்கிறது. புல் மூன் தெரியும்.. அதென்ன பிளாக் மூன் எனக் கேட்கிறீர்களா.. இந்த பிளாக் மூன் என்றால் என்ன.. எங்கிருந்து பார்த்தால் இது நமக்குத் தெரியும். இதனால் வானில் ஏற்படும் மாற்றம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது இந்த விண்வெளி பல்வேறு அதிசயங்கள் நிறைந்தவை. சில நேரங்களில் நாம் யோசிக்காத செயல்களும் கூட வானில் இயல்பாக நடக்கும். அது பார்க்கவே வியப்பாக இருக்கும்.

அப்படி ஒரு அதிசய நிகழ்வு தான் இன்று வானில் நிகழவுள்ளது அதுதான் பிளாக் மூன்.. அதென்ன பிளாக் மூன்.. நிலவு இன்று கறுப்பு கலரில் தெரியுமா என்ன.. என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பிளாக் மூன்:
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் போது நியூ மூன் எனப்படும் அமாவாசை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியை எதிர்நோக்கி இருக்கும் நிலவின் பக்கத்திற்குச் சூரியனில் இருந்து வெளிச்சம் வராது. இதன் காரணமாகவே அமாவாசை சமயத்தில் சந்திரன் நமது கண்ணுக்குத் தெரியாது. அப்படி எந்தவொரு மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறதோ.. அதைத்தான் பிளாக் மூன் என்று அழைக்கிறார்கள். இரண்டாவதாக வரும் அமாவாசையை பிளாக் மூன் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இது கிட்டதட்ட ப்ளூ மூன் நிகழ்வைப் போன்றதுதான். ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமி. அதில் இரண்டாவது முழு நிலவு நாளை தான் நாம் ப்ளூ மூன் எனக் குறிப்பிடுவோம். அதேபோலத் தான் இதில் இரண்டாவது அமாவாசை தினம் பிளாக் மூன் எனக் குறிப்பிடப்படும். இந்த பிளாக் மூன் நிகழ்வு என்பது கிட்டதட்ட 2.7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்.
உலகம் முழுவதும்:
மேலும், இந்த பிளாக் மூன் நிகழ்வு என்பது உலகெங்கும் ஒரே நேரத்தில் நடக்காது. நேர மண்டலத்தைப் பொறுத்து மாறுபடும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று பிளாக் மூன் நிகழ்வு நிகழவுள்ளது. அதேநேரம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் வசிப்போருக்கு நாளை அதிகாலை இருக்கும். இந்தியாவில் இது காலை அதிகாலை 3.75க்கு இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிகாலை தான் என்றாலும் கூட இன்று இரவு முதலே இது நமக்குத் தெரியும்.
பிளாக் மூன்:
பொதுவாக ஒரு சந்திர சுழற்சி என்பது 29.5 நாட்கள் இருக்கும். இதனால் பெரும்பாலான மாதங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே பவுர்ணமியும் அமாவாசையும் வரும். ஆனால், இதுபோன்ற சில அரிய நேரங்களில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பிளாக் மூன் அல்லது ப்ளூ மூன் நிகழ்வுகள் தோன்றும் என்கிறார்கள். பிளாக் மூனும் சரி, ப்ளூ மூனும் சரி வானவியலில் ரீதியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு நிகழ்வு என்ற போதிலும் இதற்குச் சமீப காலமாக நல்ல ஒரு வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஜொலிக்கும் வானம்:
இந்த பிளாக் மூன் நிகழ்வில் நமக்கு நிலா தெரியாது. அதேநேரம், நிலா இல்லாமல் போவதால் வானத்தில் மற்ற நட்சத்திரங்கள் தொலைதூர விண்மீன்கள் மிகப் பிரகாசமாகத் தெரியும். அதாவது கருப்பு நிற வானத்தில் கிரகங்கள் ஜொலிப்பது போல இது இருக்கும். சில நேரங்களில் தொலைநோக்கி மூலம் பார்த்தால் வியாழன், வீனஸ் போன்ற கிரகங்கள் கூட மிகத் தெளிவாகத் தெரியும். எனவே, இன்று இரவை மிஸ் பண்ணிடாதீங்க.. வானத்தைப் பாருங்கள் அழகிய நட்சத்திரங்களை ரசிக்கலாம்!












Click it and Unblock the Notifications