விமானத்தில் ஏறும் போது கால் இடறி மூன்று முறை தடுமாறி விழுந்த ஜோ பிடன்.. அதிகாரிகள் ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமானத்தில் ஏற முயன்ற போது மூன்று முறை படிக்கட்டில் தடுமாறி விழுந்தார். நல்ல வேளையாக பக்கத்தில் இருந்த கம்பியை பிடித்தபடி நடந்ததால் தரையில் விழவில்லை.
பக்கத்தில் இருந்த கம்பிபை பிடித்து சுதாரித்து நடந்து விமானத்தில் ஏறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், அதிபர் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து, அமெரிக்காவின் அதிபரானார். ஜோ பிடன் தான் அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபர் ஆவார். அவருக்கு வயது 78.

ஏன் பயணம்
அட்லாண்டாவில் இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்த விவாகரத்தில் ஆசிய-அமெரிக்க சமூகத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளார். இதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று அட்லாண்டாவுக்குச் சென்றார்,
WATCH: Biden falls three times trying to climb the stairs to board Air Force One pic.twitter.com/IfDUjLPQB4
— Breaking911 (@Breaking911) March 19, 2021
விழுந்தார்
முன்னதாக அட்லாண்டாவிற்கு செல்வதற்காக அதிபர் ஜோ பிடன் விமானத்தின் படிக்கட்டில் ஏறினார். அப்போது அடுத்தடுத்து மூன்று முறை படிக்கட்டில் கால் இடறி தடுமாறி விழுந்தார். இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுதாரித்தார்
ஆனால் நல்ல வேளையாக அவர் பக்கத்தில் இருந்த கம்பியை பிடித்தபடியே இருந்ததால் தரையில் உருண்டு விழவில்லை சுதாரித்து நடந்து விமானத்திற்குள் சென்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

நன்றாக இருக்கிறார்
இதனிடையே படிக்கட்டில் தவறி விழுந்த ஜோ பிடன் 100 சதவீதம் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு உறுதி தெரிவித்தனர். 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சிலர் ஜோ பிடனின் உடல்நலம் மற்றும் வயோதிகம் குறித்து கவலை தெரிவித்தனர்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications