Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவ நாடாம்.. "போலி கடவுள்" அனுமனுக்கு அமெரிக்காவில் சிலை எதற்காம்! மத வெறுப்பில் டிரம்ப் கட்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛அமெரிக்கா கிறிஸ்தவ நாடு. இதனால் டெக்சாஸில் எதற்கு பொய்யான கடவுளுக்கு பொய்யான சிலை வைக்க அனுமதித்து உள்ளோம்?'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவராக அலெக்சாண்டர் டங்கன் கேள்வி எழுப்பி மதவெறுப்பை உமிழ்ந்துள்ளார். இது சர்ச்சையான நிலையில் அவருக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அலெக்சாண்டர் டங்கன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அதோடு நம் நாட்டின் பொருளாதாரம் செத்துபோய்விட்டதாக தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார்.

we-are-a-christian-nation-why-why-are-we-allowing-false-hindu-god-here-in-texas-trump-party-leader

அதுமட்டுமின்றி நேட்டோ அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி சீனா மட்டுமின்றி இந்தியாவுக்கும் அதிகப்படியான வரிகளை விதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவில் குடியேறி பணி செய்து வரும் இந்தியர்களுக்கும் எச் 1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் ஆப்பு வைத்துள்ளார்.

இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது டிரம்பின் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் மதவெறுப்பை உமிழ்ந்துள்ளார். அவரது பெயர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டிரம்பின் குடியரசு கட்சி சார்பில் டெக்சாஸ் தலைவராக உள்ளார். மேலும் அமெரிக்காவின் செனட் சபைக்கான தேர்தலின்போது போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தான் அலெக்சாண்டர் டங்கன் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அனுமன் சிலைக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛டெக்சாஸில் ஏன் பொய்யான ஒரு ஹிந்து கடவுள் சிலையை அனுமதித்து இருக்கிறோம். இது ஒரு கிறிஸ்தவ நாடு'' என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த எதிர்ப்பை தொடர்ந்து அவர் தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் இன்னொரு போஸ்ட்டையும் பதிவிட்டார். அதில், நான் யாரையும் வெறுக்கவில்லை. இழந்தவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது. இயேசு கிறிஸ்துவிடம் சரணடைவதன் மூலமாகவே உயிர்கள் காப்பாற்றப்படுவதை நான் காண விரும்புகிறேன்.

கடவுள் தீமைகளை வெறுக்கிறார். இதனால் நாமும் அதனை வெறுக்கிறோம் நீதிமொழிகள் 8:13ல் உள்ளது. ஆனால் நாம் மக்களை நேசிக்கிறோம். உண்மையான வெறுப்பு? என்பது உண்மை பற்றி பேசாமல் அமைதியாக இருப்பது தான். இதனால் உண்மையை தைரியமாக பேசுங்கள்.

என்னை தவிர வேறு கடவுள் உனக்கு இருக்க கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலேயோ உள்ள எந்த ஒரு சிலை அல்லது உருவத்தை உருவாக்கி கொள்ளக்கூடாது. கடவுள் பற்றிய உண்மையை பொய்யாக மாற்றிவிட்டார்கள்.

கடவுளின் உண்மையான சத்தியத்தை மறைத்து படைத்தவரை வணங்குவதற்கு பதிலாக அவர் உருவாக்கிய உலகத்தையும், பொருட்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். கடவுள் எப்போதும் புகழப்படுவதற்கு உரியவராக இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

இது அலெக்சாண்டர் டங்கன் மீதான கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல் டெக்சாஸில் உள்ள டிரம்பின் குடியரசு கட்சிக்கும் அவர் மீது புகார் அனுப்பி உள்ளது.

அலெக்சாண்டர் டங்கன் விமர்சனம் செய்துள்ள அனுமன் சிலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சுகர்லேண்ட் நகரில் அமைந்துள்ளது. அங்குள்ள அஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயரத்தில் வெண்கலத்தால் இந்த அனுமன் சிலை உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சிலை திறக்கப்பட்டது. அமெரிக்காவில் ஒற்றுமையின் சிலையாக போற்றப்படும் இந்த சிலை அந்த நாட்டில் உள்ள உயரமான அனுமன் சிலைகளில் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+