அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம்... அமைதியாக இருங்கள் - ஜோ பிடன்
வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜ
வாஷிங்டன்: வெற்றி உறுதியாகி விட்டது அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும் வரை அமைதியாக இருங்கள் என்று ஜோ பிடன் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நமது வெற்றியை உறுதிபடுத்தி வருவதாகவும் கூறியுள்ளார் ஜோ பிடன். 264 சபை வாக்குகளை பெற்றுள்ள ஜோ பிடன் வெற்றிக்கு இன்னும் 6 வாக்குகள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசிகட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்னும் சில லட்சம் வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில், கடுமையான போட்டி நிலவுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நிறைய தபால் வாக்குகள் இருப்பதால் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டதாக கருதலாம். இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அமெரிக்க அதிபருமான டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். பிடன் வெற்றிபெற இன்னும் 6 வாக்குகளே தேவை.
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவரப்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதை எதிர்கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட டிரம்பிற்கு இல்லை. வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்று வருவதாகவே குற்றம் சாட்டி வருகிறார் டிரம்ப்.
இந்த நிலையில் வெற்றிக்கனியை சுவைக்கத் தயாராகி விட்ட ஜோ பிடன் நிதானமாக பேசத் தொடங்கியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ பிடன், வெற்றி பெறப்போகிறோம் என்று கூறியுள்ள பிடன், வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நடந்து முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். தவறுகளை நடக்க விடமாட்டோம். ஜனநாயகத்தின் மீது நாங்கள் வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
நாங்கள் வெற்றி பெறப்போகிறோம் என்பதை வாக்கு எண்ணிக்கையின் எண்கள் உணர்த்த தொடங்கி விட்டன. அரசியலின் நோக்கம் தேசத்திற்காக உழைப்பதாகும். நாங்கள் எதிர்கட்சியாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல, நாங்கள் அமெரிக்கர்கள் என்று கூறியுள்ளார் ஜோ பிடன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications