கிம்மின் உடல் நிலை குறித்து... என்ன இப்படி சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார்.
Recommended Video
அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை வழங்கினர். இதன் காரணமாக டிரம்ப் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு வெளிப்படையாக வரவில்லை.
கிம் ஜாங் உன் பற்றிய கேள்விக்கு வெள்ளை மாளிகையில் பதில் அளித்த அதிபர் டிரம்ப், "நான் அவரை நல்ல உடல் நலம் பெற வாழ்த்துகிறேன். நாட்டின் நலனுக்காக எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. அவர் நலமாக இருப்பதை காண விரும்புகிறேன்.

உடல் நிலை பற்றி
மேலும் கிம் உடல்நலம் மோசமடைவதாக வரும் தகவல்கள் உண்மை என்று வந்தாலும், அதை பற்றி "எங்களுக்குத் தெரியாது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை கிம்மே வெளிவந்து சொல்லக்கூடும், அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்போம்" என்று டிரம்ப் கூறினார்.

தென்கொரியா மாறுபட்ட விளக்கம்
இதனிடையே அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், கடந்த வாரம் இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஆபத்தான நிலையில் இருப்பதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை குறித்து எங்களுக்கு தெரியவில்லை. இதனிடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அலுவலகம், வடகொரியா அதிபர் கிம் நாட்டின் கிராமப்புறங்களில் நெருங்கிய உதவியாளர்களின் உதவியுடன் சாதாரண வேலைகளில் இருப்பதாக சொல்கிறார்கள் என்று கூறினார்கள்

விளக்கமும் வரவில்லை
கிம் எப்படி இருக்கிறார் என்பது பற்றி புதன்கிழமை காலை வரை வட கொரிய அரசு ஊடகங்களில் இருந்து தொடர்ந்து எந்த தகவலும் வரவில்லை. உலகெங்கிலும் கிம் பற்றி செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் கிம் பற்றி எந்த ஒரு செய்தியையும் வட கொரியா அரசு ஊடகமோ, அல்லது வடகொரியா அரசு பிரதிநிதிகளோ தெரிவிக்கவில்லை.

யாரும் பார்க்கவில்லை
கிம் ஜாங் உன் தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வழக்கமாக இதில் கிம் பங்கேற்பார். ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கிம் பங்கேற்கவில்லை. ஐந்து நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசாங்க கூட்டத்தில் தோன்றினார். அப்போதுதான், மக்கள், கடைசியாக அவரை பொது நிகழ்வில் பார்த்தனர்.

அண்ணன் இடத்தில் தங்கை
இதனிடையே அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்கள் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் நிலையில் அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் (31), வடகொரியாவின் தலைவராக உருவெடுப்பார் என்று ஊடகங்கள் சொல்கின்றன. இப்போதைய நிலையில் அமெரிக்கா உள்பட எந்த நாடும் வடகொரியா அதிபருக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியாது. முற்றிலும் மர்ம தேசமாக உள்ளதே இதற்கு காரணம்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications