"டைம் டிராவல்!" காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஜேம்ஸ் வெப்! அது எப்படி சாத்தியம்.. வியக்கும் மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் புதிய படங்களை வெளியிட்டு உள்ளது.
இந்த பிரபஞ்சம் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஜேம்ஸ் வெப் என்ற டெலஸ்கோப்பையும் அமெரிக்கா விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
கடந்த மாதம் முதலே ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமிக்கு அனுப்பும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இது பிரபஞ்சத்தின் தோற்றம் உள்ளிட்ட பல தகவல்களைக் கண்டறிய உதவுகிறது.

புதிய படம்
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அனுப்பும் படங்கள் லட்சம் ஆண்டுகளில் இந்த பிரபஞ்சம் எந்தளவுக்கு மாறி உள்ளது எப்படி மாறுகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. இந்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இப்போது சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி படத்தை அனுப்பி உள்ளது. கார்ட்வீல் கேலக்ஸியில் புதிய நட்சத்திர உருவாக்கம் மற்றும் பிளாக் ஹோல் குறித்தும் இதில் விளக்கப்பட்டு உள்ளது.

சுழல் கேலக்ஸி
பெரிய சுழல் கேலக்ஸி மற்றொரு சிறிய கேலக்ஸி உடன் மோதும் போது சக்கரம் போன்ற அமைப்பைக் கொண்டு இருக்கும் கேலக்ஸி உருவாகுகிறது. இந்த கார்ட்வீல் கேலக்ஸி இப்போது மாறிக் கொண்டு இருக்கும் படலத்தில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இப்படி ஏற்படும் மோதல்கள் தான் ஒரு கேலக்ஸியின் உருவம் மாறுகிறது. இந்த கார்ட்வீல் கேலக்ஸி உள்பக்கத்தில் இருந்து வெளியே விரிவாவது போல உள்ளது.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. விண்வெளியில் மிதந்து கொண்டு இருக்கும், இந்த டெலஸ்கோப் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றி இருக்கும் என்பது குறித்த ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதில் இருக்கும் NIRCam எனப்படும் அகச்சிவப்பு கேமரா எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் கடந்த காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறது. அது எப்படி என கேட்கிறார்களா வாங்கப் பார்ப்போம்!

ஒளி ஆண்டுகள்
இந்த டெலஸ்கோப் அனுப்பும் படங்கள் பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளவை ஆகும். இந்த கார்ட்வீல் கேலக்ஸி கூட சுமார் 500 ஓளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளவை தான். இதுவரை மனிதன் அறிந்தவற்றிலேயே மிக வேகமாகச் செல்லும் ஒளியின் வேகத்தில் சென்றால் கூட இந்த கேலக்ஸியை அடைய 500 ஆண்டுகள் ஆகும். இதைத்தான் நாம் ஒளி ஆண்டுகள் தொலைவு எனக் குறிப்பிடுகிறோம்.

நட்சத்திரம்
அதாவது, நாம் வானத்தில் பார்க்கும் பார்ப்பது நட்சத்திரங்களை இல்லை. நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளியைத் தான் நாம் பார்க்கிறோம். அப்படி வெளியாகும் ஓளி பூமியை அல்லது அந்த டெஸல்கோப்பை அடைய சில ஒளி ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அந்த நட்சத்திரம் அங்கேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் அந்த நட்சத்திரம் அழிந்தே கூட போய் இருக்கலாம்.
Recommended Video

தோற்றம்
இப்படித் தான் விண்வெளியில் இருக்கும் பல கேலக்ஸிக்களின் கடந்த கால படங்களை அனுப்பி வரலாற்றைக் கண்டறிய உதவுகிறது ஜேம்ஸ்வெப். இப்போது எடுக்கப்பட்டுள்ள கார்ட்வீல் கேலக்ஸியின் படம் கூட 5 ஒளி ஆண்டுகளைப் பழமையானது ஆகும். இந்த படங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் ஒரு நட்சத்திரம் எப்படி மாறுகிறது என்பதைக் கண்டறிய முயலும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications