ஊழியர்களை ஹேப்பியாக வைத்திருக்கும் நிறுவனங்கள்.. டாப் 15இல் 3 இந்திய நிறுவனம்.. முதலிடம் யாருக்கு
வாஷிங்டன்: மிகவும் மகிழ்ச்சியான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் பட்டியல் வெளியான நிலையில், இதில் டாப் 15 இடங்களில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் தான் அதன் முதுகெலும்பு. நல்ல திறமையான ஊழியர்கள் கிடைத்துவிட்டால் போதும் எந்தவொரு சிக்கலான நிலையில் இருந்தும் நிறுவனத்தால் தப்ப முடியும்.

அப்படிப்பட்ட ஊழியர்களை மனநிறைவுடன் வைத்திருக்கப் பல நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்கும். அதிலும் குறிப்பாக ஊதிய உயர்வு, போனஸ் எனச் சலுகைகளை ஐடி நிறுவனங்கள் கொடுத்து வரும்.
மகிழ்ச்சியான நிறுவனம்: இதற்கிடையே மகிழ்ச்சியான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எது என்பதைக் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் எந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதைக் கண்டறிய இந்த ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் மொத்தம் 3 இந்திய நிறுவனங்கள் டாப் 15 இடங்களுக்குள் வந்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த தரவரிசை ஊழியர்கள் நிறுவனம் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர், தங்கள் நிறுவனம் குறித்து எந்தளவுக்குத் தெரிந்து வைத்துள்ளனர் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்துக் கணக்கிட்டுள்ளனர். மேலும், ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தளவுக்குக் கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துள்ளனர். கொரோனா காலத்தில் தான் ஊழியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது எந்தளவுக்கு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

முதலிடத்தில் எந்த கம்பெனி: ஊழியர்களின் மகிழ்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர். குறைந்தபட்சம் 1,000 ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களிடம் மட்டுமே இந்த சர்வேவை நடத்தியுள்ளனர். அமெரிக்கா முழுக்க பணியாற்றும் பல நூறு ஊழியர்களிடம் விரிவான சர்வே நடத்தப்பட்டு இந்த பட்டியலை உருவாக்கியுள்ளனர். இந்த லிஸ்டில் லவ்ஸ் டிராவல் ஸ்டாப்ஸ் & கன்ட்ரி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கம்பெனி 100க்கு 83 மார்கை பெற்றுள்ளது.
இதில் எச்&ஆர் பிளாக் என்ற நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், உலகின் மிக முக்கிய ஏர்லைன் நிறுவனங்களில் ஒன்றான டெல்டா ஏர் லைன்ஸ் இந்த லிஸ்டில் 3ஆவது இடத்தில் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய நிறுவனமான, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்த லிஸ்டில் 4ஆவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து அக்சென்ச்சர், ஐபிஎம் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

3 இந்திய நிறுவனங்கள்: இதில் டாப் 15 இடங்களுக்குள் 3 இந்திய நிறுவனங்கள் இருக்கிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 4ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், மற்றொரு இந்திய டெக் நிறுவனமான விப்ரோ இதில் 8ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல இன்போசிஸ் நிறுவனம் இந்த லிஸ்டில் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. இப்படி மொத்தம் 3 முக்கிய நிறுவனங்கள் டாப் 15 இடங்களுக்குள் வந்துள்ளது.
இந்த லிஸ்டில் மற்ற முக்கிய நிறுவனங்கள் எந்த இடங்களில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். இதில் நைக் ஷூ கம்பெனி 10ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், சிடிஎஸ் ஐடி நிறுவனம் 13ஆவது இடத்திலும், மைக்ரோசாப்ட் 15ஆவது இடத்திலும் இருக்கிறது. அதேபோல வால்ட் டிஸ்னி நிறுவனம் 19ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், ஆப்பிள் 20ஆவது இடத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications