உலகின் சிறந்த ஏர்போட்! முதலிடத்தில் பயங்கர ட்விஸ்ட்.. லிஸ்டில் 2 தென்னிந்திய விமான நிலையங்கள்.. செம
வாஷிங்டன்: ஸ்கைட்ராக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் பெஸ்ட் 100 ஏர்போர்ட்கள் தரவரிசையில் இந்தியாவில் இருந்து 4 விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.
கொரோனா காலத்தில் விமான துறை மொத்தமாக முடங்கினாலும் கூட அதன் பிறகு விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. உலகின் பல நாடுகளில் விமான பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது.

இதற்கிடையே ஸ்கைட்ராக்ஸ் என்ற அமைப்பு சர்வதேச அளவில் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து உலகின் பெஸ்ட் விமான நிலையங்கள் என்ற விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாாண்டிற்கான பெஸ்ட் விமான நிலையங்களுக்கான லிஸ்ட்டை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
டாப் 3 யார்: கடந்த 12 ஆண்டுகளாகவே சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்த முறை இது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து தென்கொரியாவின் சியோல் இஞ்சியோன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.. குடும்பத்துடன் பயணிப்போர் மிகவும் விரும்பும் விமான நிலையமாக இது இருக்கிறது.
அடுத்த இடங்கள்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா மற்றும் நரிட்டா ஏர்போர்ட்கள் முறையாக ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடித்தன. காதலர்கள் தலைநகரான பாரீஸ் ஏர்போர்ட் 6ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், துபாய் ஏர்போர்ட் 7ஆவது இடத்தையும் ஜெர்மனியின் முனிச் 8ஆவது இடத்திலும் இருக்கிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச், துருக்கியின் இஸ்தான்புல் ஆகியவை 9 மற்றும் 10ஆவது இடத்தில் உள்ளன. இதில் துபாய் ஏர்போர்ட் கடந்தாண்டு 17ஆவது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 10 இடங்கள் முன்னேறி இருக்கிறது.
இந்த லிஸ்டில் ஹாங்காங் விமான நிலையம் ஒரே ஆண்டில் அதிகபட்ச இடங்கள் முன்னேறிய ஏர்போர்ட்டாக இருக்கிறது. கடந்தாண்டு அவர்கள் 33ஆவது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 22 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா இல்லை: வழக்கம் போலவே இந்த லிஸ்டில் அமெரிக்க ஏர்போர்ட்கள் டாப் இடங்களில் எங்கும் இல்லை. அமெரிக்காவில் ஏர்போர்ட்கள் அதிகம் இருந்தாலும் பயணிகள் வசதி பெரியளவில் இருக்காது. எனவே, பெஸ்ட் ஏர்போர்ட்டில் அவர்கள் முன்னணியில் வர மாட்டார்கள். அதிகபட்சமாக அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா 24ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஏர்போர்ட் 6இடம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஏர்போர்ட்களின் ஆதிக்கம் இதில் தொடர்கிறது.
இந்திய ஏர்போர்ட்கள்: இந்த டாப் 100 சிறந்த ஏர்போர்ட்களில் இந்தியாவில் இருந்து நான்கு விமான நிலையங்கள் மட்டுமே லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது. குறிப்பாக டாப் 50இல் ஒரே ஒரு இந்திய ஏர்போர்ட் மட்டுமே இருக்கிறது.. டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் மும்பை விமான நிலையம் கடந்த ஆண்டு 84வது இடத்தில் இருந்த நிலையில், இந்த முறை 95வது இடத்திற்கு சரிந்துள்ளது.
தென்னிந்தியாவில் இரு ஏர்போர்ட்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது. பெங்களூரு விமான நிலையம் 10 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல ஹைதராபாத் ஏர்போர்ட் 65ஆவது சிறந்த விமான நிலையத்திலிருந்து 61வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications