நாளை ஆஸ்கர் விழா.. முத்த சர்ச்சை முதல் வில் ஸ்மித் விட்ட பொளேர் வரை.. ஆஸ்கர் சர்ச்சைகள் தெரியுமா

ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தாண்டு ஆஸ்கர் விழா நாளை நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளும் கூட சர்ச்சையிலிருந்து விடுபடவில்லை. ஆஸ்கரில் பாகுபாடு என்பதில் தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தாண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான நேரம் நெருங்கிவிட்டது.. இந்திய நேரப்படி காலை அதிகாலையில் ஆஸ்கர் விழா நடைபெறுகிறது. அகாடமி விருதுகள் என்றும் அழைக்கப்படும் ஆஸ்கர் விருந்துகள் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

இதில் சர்வதேச அளவில் சிறந்த ஹாலிவுட் மற்றும் பிற மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கருக்கு நாமினேஷன் பட்டியலில் உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆஸ்கர்

ஆஸ்கர்

1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதாக இது உள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் உலகமே உற்றுநோக்கும் நிகழ்வாக ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. அதேநேரம் இந்த ஆஸ்கர் விருதுகளும் கூட சர்ச்சையிலிருந்து விடுபடவில்லை. பாகுபாடு என்பதில் தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் ஆஸ்கரை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை நாம் விரிவாகப் பார்க்கலாம். இதில் கடந்தாண்டு வில் ஸ்மித் அறைந்ததுதான் சமீபத்திய சர்ச்சை.

 வில் ஸ்மித்

வில் ஸ்மித்

கடந்த ஆண்டு ஆஸ்கார் விழாவில், ​​கிறிஸ் ராக் விருதை அறிவிக்கவிருந்தார். அப்போது அவர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி கேலி செய்தார். ஜடா ஸ்மித்திற்கு அலோபீசியா பாதிப்பு காரணமாகத் தலையில் முடி இருக்காது. இதைக் குறிப்பிட்டு நக்கல் செய்யும் வகையில் கிறிஸ் ராக் பேசியிருந்தார். வில் ஸ்மித் இதைக் கேட்டு முதலில் சிரிப்பது போலவே தெரிந்தது.. இருப்பினும், அவரது மனைவி இதைக் கேட்கும்போதே கடுப்பானார். இதைப் பார்த்தவுடன் மேடை ஏறிய வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை ஓங்கி அறைந்தார். இது பெரிய சர்ச்சையானது.

 தவறான அறிவிப்பு

தவறான அறிவிப்பு

தவறான காரணங்களுக்காக ஆஸ்கார் வரலாற்றில் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாக 89வது ஆஸ்கர் விழாவின் சிறந்த படத்திற்கான அறிவிப்பு இருக்கிறது. அப்போது முதலில் லா லா லேண்ட் சிறந்த படம் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களும் மேடை ஏறி விருதைப் பெற்றுக் கொண்டனர். படக்குழு வெற்றி உரையை ஆற்றிக் கொண்டிருந்த போது தான், மூன்லைட் படம் தான் உண்மையில் வெற்றியாளர் என்பது தெரியவந்தது. வெற்றி பெயர் இருந்த என்வலப்பிற்கு பதிலாக வேறு ஒரு என்வலப் கொடுத்ததே இதற்கு காரணமாகும். "என்வலப்கேட்" என்று அழைக்கப்படும் இது, விழா அமைப்பாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

 இனவெறி சர்ச்சை

இனவெறி சர்ச்சை

2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருந்துகள் இனவெறி குறித்த சர்ச்சையில் சிக்கியது. முந்தைய ஆண்டு பலதரப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும், ஆஸ்கர் விருதில் நடிப்பு பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த 20 பேரும் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியதது. இதையடுத்து OscarsSoWhite என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. மேலும், பலரும் ஆஸ்கரில் பன்முகத்தன்மை இல்லை என்று விமர்சித்தனர். இதன் பின்னர், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ஏற்க மறுத்த மார்லன் பிராண்டோ

ஏற்க மறுத்த மார்லன் பிராண்டோ

1989இல் நடந்த 61வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் ராப் லோவ் மற்றும் ஸ்னோ ஒயிட் ஆகியோர் இசைக் கச்சேரி நடந்தது. ஆஸ்கர் வரலாற்றில் நடந்த மிக மோசமான நிகழ்ச்சி என்று இப்போது வரை இதுதான் பெயரைப் பெற்றுள்ளது. 1973இல் தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோ சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இருப்பினும், விருதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாகப் பூர்வீக அமெரிக்கரான சச்சீன் லிட்டில்ஃபீதர் மேடையேறினார். பிராண்டோ சார்பில் விருதை நிராகரித்த சச்சீன், திரைத்துறையில் பூர்வக்குடிகள் தவறாக நடத்தப்படுவதைப் பற்றிப் பேசினார்.

முத்தம்

முத்தம்

2003 ஆஸ்கரில் தி பியானிஸ்டில் படத்திற்காக அட்ரியன் பிராடிக்கு சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹாலே பெர்ரியை மேடையிலேயே பிடித்து முத்தமிட்டு விருதைக் கொண்டாடினார். இந்த நிகழ்வுகள் எதுவும் திட்டமிடாத ஒன்றாகும். இது பெர்ரிக்கு சங்கடத்தையே ஏற்படுத்தியது. அவர் அசவுகரியமாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அட்ரியன் பிராடி நடவடிக்கையைப் பலரும் மிகக் கடுமையாகச் சாடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+