டாப் 50 பணக்கார நகரங்களில்.. இரண்டே இரண்டு இந்திய சிட்டிக்கள்! லிஸ்ட்டில் சென்னை இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் டாப் 50 பணக்கார நகரங்கள் பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவில் இருந்து இரண்டு நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் டாப் 50 பணக்கார நகரங்கள் லிஸ்டை வெளியிடும். இதில் லிஸ்டில் இந்தாண்டு முதலிடத்தில் அமெரிக்காவின் பொருளாதார தலைநகர் என்று அழைக்கப்படும் நியூயார்க் இருக்கிறது.

What are the Indian cities in top 50 richest cities of world

இதில் லிஸ்டில் பிராந்தியம் வாரியாக எந்த பகுதியில் இருந்து எத்தனை நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து எந்த நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

நியூயார்க் டாப்: நியூ வேர்ல்ட் வெல்த் உடன் இணைந்து ஹென்லி & பார்ட்னர்ஸ் இந்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் பணக்கார நகரமாக நியூயார்க் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 349,500 மில்லியனர்கள் உள்ளதாகவும் அவர்களின் ஒட்டுமொத்த மொத்த சொத்து மதிப்பு 3.49 டிரில்லியன் டாலராக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த 3 டிரில்லியன் என்பது உலகின் பெரும்பாலான G20 நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை காட்டிலும் அதிகமாகும்.

இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்திலும் அமெரிக்க நகரம் தான் இருக்கிறது. அமெரிக்காவின் தி பே ஏரியா என்ற நகரம் 3.05 டிரில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல டோக்கியோ 2.98 டிரில்லியன் மதிப்புடன் 3ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், சிங்கப்பூர் 2.44 டிரில்லியன் உடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல லண்டன் 2.27 டிரில்லியன் டாலருடன் இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நகரங்கள்: தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரீஸ் (பிரான்ஸ்), சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய நகரங்கள் 6 முதல் 8 வரையிலான இடங்களில் உள்ளன. ஹாங்காங் மற்றும் பெய்ஜிங் டாப் 10 நகரங்களில் வந்துள்ளது. பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது டாப் 10 பணக்கார கரங்களில் 5 நகரங்கள் ஆசிய பசிபிக் பகுதியை சேர்ந்தவையாக இருக்கிறது. ஆசியாவிலேயே பணக்கார நகரமாக டோக்கியோ மாறியுள்ளது.

அதேநேரம் டாப் 50 லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக அமெரிக்கா தொடர்கிறது. டாப் 50 நகரங்களில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 11 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. வேறு எந்த நாட்டில் இருந்தும் இத்தனை நகரங்கள் இந்த லிஸ்டில் இல்லை. அடுத்து சீனாவில் இருந்து மட்டும் மொத்தம் 5 நகரங்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா எங்கே: இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து இரண்டே இரண்டு நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள. நமது நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பை இந்த லிஸ்டில் 24ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல இந்த லிஸ்டில் தேசிய தலைநகரான டெல்லி 37ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் பெங்களூர் இடம்பெறவில்லை என்றாலும் பெங்களூர் நம்பிக்கை தருவதாக உள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் கோடீஸ்வரர் வேகமாக அதிகரிக்கும் நாடாகப் பெங்களூர் இருக்கிறது. அதேபோல சென்னையும் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை.

எந்த பிராந்தியத்தில் அதிகம்: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக ஐரோப்பாவில் இருந்து இதில் 16 நகரங்கள் உள்ளன. தொடர்ந்து ஆசியாவில் 13 நகரங்களும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து 5 நகரங்களும் இந்த லிஸ்டில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+